'அறுசுவை அரசி'ப் பட்டத்தை வெல்லப்போவது யார்...?! | Participate and win the Kitchen Star Title..

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (11/06/2019)

கடைசி தொடர்பு:18:03 (11/06/2019)

'அறுசுவை அரசி'ப் பட்டத்தை வெல்லப்போவது யார்...?!

சுவையான உணவுக்கு நாம் எப்போதும் அடிமைதான். 'இப்படி ஒரு சுவையான உணவை சாப்பிட்டதே இல்ல', 'சமையல் சூப்பர்'... இப்படியெல்லாம் பலர் பலரை வாழ்த்தியிருக்கலாம். ஏன் நம் வீட்டிலேயே அம்மா, மனைவி, சகோதரிகளை வாழ்த்தியிருப்போம். சமையல் என்பது ஒருவித கலை. அதன் மூலமும் நமது திறமையை வெளிப்படுத்தலாம். அதற்கான வாய்ப்பை வழங்குகிறது SKM 'Best' நிறுவனம். 'ச்சே... வேற லெவல்ல சமைக்குறோமே' என்று நினைக்கும் அத்தனை பெண்மணிகளுக்குமான 'அறுசுவை அரசி' சமையல் போட்டியில் கலந்துகொள்ள நீங்கள் தயாரா?

'அறுசுவை அரசி' டைட்டிலை வெல்ல... 

 SKM 'Best'-இன் புதிய தயாரிப்பான 'Egg White Cube'-ஐப் பயன்படுத்தி ஒரு அசத்தலான டிஷ்'ஷைச் செய்யவும். நீங்கள் செய்த அந்த உணவின் செய்முறையை/ரெசிப்பியை, இம்மாத இறுதிக்குள் (30/06/2019) SKM 'Best'-ற்கு அனுப்பிவைக்கவும். இதன் மூலம் பல சூப்பர் டூப்பர் பரிசுகளை வெல்வதுடன், SKM ஃபுட் வீடியோவில் உங்களது ரெசிபி இடம்பெறுவதற்கான கலக்கல் வாய்ப்பும் காத்திருக்கின்றது!

முட்டையின் ஸ்பெஷாலிட்டி!

வைட்டமின் A, B5, B12, B2, B6, D. E, & K எனப் பல சத்துக்கள் அனைத்தும் ஒரே ஒரு முட்டைக்குள் அடங்கியிருக்கின்றன. மூளையைக் கூர்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முட்டை உதவுகிறது. கண்களுக்கும், தசைகளுக்கும் வலுவூட்டுகிறது, உடலில் நல்லக் கொழுப்பை மட்டுமே உயர்த்துகிறது. அதிகப்படியான புரதச்சத்தை முட்டை வழங்குவதால், கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கவும் உதவியாக இருக்கிறது. 

ஒரு முழு முட்டையைவிட அதனுள் இருக்கும் வெள்ளைப் பகுதி மிகக்குறைந்த அளவே கொழுப்பைக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், குறைந்த அளவு கொழுப்பைக்கொண்டதாக இருப்பதாலும் முட்டையின் வெள்ளை, இதயப் பிரச்னை இருப்பவர்களுக்கு பாதுகாப்பான உணவாக அமைகிறது.  ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க, எலும்புகளுக்கு வலுவூட்ட, வயதான தோற்றத்தை குறைக்க மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவாக முட்டையின் வெள்ளை திகழ்கிறது.

SKM 'Best' 

முழுக்க முழுக்க போஷாக்குமிக்க முட்டையை வைத்தே பல தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது SKM 'Best' நிறுவனம். இந்நிறுவனத்தின் புது வரவு 'Egg White Cube'. "முட்டையின் வெள்ளையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தக் க்யூப் வடிவ உணவை அப்படியே உண்ணலாம், சமையலுக்கும் ஏற்றதாகும். விரைவாக இதனைவைத்து சமையலை முடித்துவிட முடியும். விரைந்து ஜீரணமாகும் உணவாக இருக்கும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த Egg White Cube-களை உண்ணலாம். புரதச்சத்து மிகுதியாக காணப்படும் Egg White Cube, ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது" என்கிறது SKM 'Best' நிறுவனம். 

எனவே, உங்கள் கைவண்ணத்தைக்காட்டி பரிசுகளை அள்ளுங்கள்! அறுசுவை அரசிப் பட்டத்தையும் வெல்லுங்கள்

போட்டியில் கலந்துகொள்ளவும், விதிமுறைகளை தெரிந்துகொள்ள கீழே இருக்கு படிவத்தை பூர்த்தி செய்க...

 

விவரங்களைப் பெற

UPLOAD YOUR RECIPE

UPLOAD YOUR DISH PHOTO

UPLOAD YOUR PHOTO(Optional)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க