`வருங்காலத்தில் விமானங்கள் இப்படிதான் இருக்குமாம்?!' - தயாராகிறது புதிய டிசைன் | Is this how aeroplanes will look in the future?- New design in works

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:40 (12/06/2019)

`வருங்காலத்தில் விமானங்கள் இப்படிதான் இருக்குமாம்?!' - தயாராகிறது புதிய டிசைன்

முக்கிய உலகநாடுகள் அனைத்தும் குறைந்த மாசு, இயற்கையைப் பாதிக்காத தொழில்நுட்பம், எரிபொருள் மிச்சப்படுத்தும் வழிகள் எனப் பசுமைத் திட்டங்களை நோக்கி நகர்ந்துவருகின்றன. அப்படியான பல முயற்சிகளில் ஒன்றாக இப்போதைய விமானத்தின் தோற்றத்தை அப்படியே மாற்றும் புதிய V-வடிவிலான டிசைன் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறது நெதர்லாந்தைச் சேர்ந்த KLM Royal Dutch Airlines நிறுவனமும், Delft University of Technology (TU Delft) பல்கலைக்கழகமும். இதை “Flying-V” விமானம் என்று அழைக்கின்றனர்.

V-வடிவிலான டிசைன்

இந்த V-வடிவிலான டிசைன் நெடுதூரம் பயணிக்கும் விமானங்களின் எரிபொருள் செலவை பெருமளவில் குறைக்குமாம். இதில் பயணிகள் இருக்கைகள் விமானத்தின் இறக்கைகளில் அமையும். லக்கேஜ் மற்றும் எரிபொருள் டேங்க்குகளும் இதே இடத்தில்தான் இருக்கும். இதன்மூலம் கூடுதல் ஏரோடைனமிக்காகவும், சற்றே எடைகுறைந்தும் இருக்கும் விமானம். இன்றைய விமானங்களைவிட சுமார் 20% வரை எரிபொருள் சேமிக்கமுடியும். தற்போதைய ஏர்பஸ் A350 ரக விமானத்தின் இருக்கை அளவும், அதே இறக்கை நீளமும் இதில் இருக்கும்.

 

 

KLM நிறுவனத்தின் 100-வது ஆண்டு விழா இந்த அக்டோபர் நடைபெறும். அப்போது இதன் உள்கட்டமைப்பு எப்படி இருக்கும் என்பது முதல்முறையாகக் காட்டப்படும். விமானம் தயாரிப்பதே சிக்கலானதுதான். அதிலும் புதிய வடிவமைப்பில் சரியாக வடிவமைப்பது என்பது பெரும் வேலை. இப்படி டிசைனில் சிறிய மாற்றங்களை அவசரமாகக் கொண்டுவந்து இரண்டு விபத்துகளைக் கண்டது போயிங்கின் புதிய 737 MAX விமானங்கள். இதனால் போதிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக இந்த 'Flying-V' இயக்கத்திற்கு வர எப்படியும் 2040 ஆகிவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க