உலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டு... கூகுளையும் ஆப்பிளையும் ஓவர்டேக் செய்த நிறுவனம் எது? | This tech giant has overtook google and apple to become worlds most valuable brand

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:18:20 (12/06/2019)

உலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டு... கூகுளையும் ஆப்பிளையும் ஓவர்டேக் செய்த நிறுவனம் எது?

 

அமேஸான் பிராண்டு

உலகின் சக்திவாய்ந்த பிராண்டு எது என்பதில் ஒவ்வோர் ஆண்டும் டெக் உலகை ஆட்டுவிக்கும் ஒரு கேள்வி. 2006 க்குப் பின் டெக்னாலஜி நிறுவனங்களே இதில் முதல் மூன்று இடங்களை அதிகம் பிடித்திருக்கின்றன. அதுவும், கடந்த 12 ஆண்டுகளாக கூகுளும் ஆப்பிளும் மட்டுமே மாறி மாறி முதலிடத்தில் இருந்திருக்கின்றன. சென்ற ஆண்டு கூகுள் முதலிடத்திலும் ஆப்பிள் இரண்டாமிடத்திலும் இருந்தன. இந்த ஆண்டு இரண்டு பிராண்டையும் ஓவர்டேக் செய்து அமேசான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் இரண்டாமிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள, கூகுள் மூன்றாமிடத்துக்கும் போய்விட்டது.

அமேசான் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 315.5 பில்லியன். சென்ற ஆண்டைவிட 108 பில்லியன் அதிகம். இந்த ஆண்டுதான் அமேசானின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக மாறியிருக்கிறது. நிறைய சின்ன நிறுவனங்களை வாங்கியதும் புதிதாக பிசினஸ் வெர்ட்டிக்கல்களை ஆரம்பித்ததும் இதற்கான முக்கிய காரணங்கள்.

ஆப்பிளின் இப்போதைய மதிப்பு 309.5 பில்லியன். கூகுளின் மதிப்பு 309 பில்லியன். டாப் 10 பிராண்டு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் டெக்னாலஜி நிறுவனங்களே. சற்று வித்தியாசமான பிராண்டு என்றால் மெக்டொனால்டுதான். உணவகமான இந்த பிராண்டின் மதிப்பு 130.3 பில்லியன். ஃபேஸ்புக்குக்கு இந்தப் பட்டியலில் ஆறாமிடம்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க