Published:Updated:

`சாகலாம்னுகூட தோணுச்சு... ஆனா, இப்போ நானே சம்பாதிக்கிறேன்’ - 80 வயது மூதாட்டியின் நம்பிக்கை குரல்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்தவர், 80 வயது அன்னக்கொடி. பெயரில் மட்டுமே உணவு என்ற அர்த்தம் இருக்கு. ஆனால் உண்மையில், தினம் தினம் சாப்பாட்டுக்கு திண்டாட்டம்தான். ஏற்காட்டில் குப்பைகளில் கிடைக்கும் பாட்டில்களைப் பொறுக்கி பழைய கடைகளில் விற்று, அதன்மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தைக்கொண்டு பிழைப்பை நடத்திவருகிறார். இவரின் நிலைகுறித்து தெரிந்துகொள்ள அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்... 

`சாகலாம்னுகூட தோணுச்சு... ஆனா, இப்போ நானே சம்பாதிக்கிறேன்’ - 80 வயது மூதாட்டியின் நம்பிக்கை குரல்!

``எனக்கு, ஏற்காடுதான் சொந்த ஊர். இதே ஊரைச் சேர்ந்தவருடன்தான் கல்யாணம் ஆச்சு. ஒரு மகன். என் மகனுக்கு 30 வயசு இருக்கும். நோய்வாய்பட்டதால இறந்துபோயிட்டான். கொஞ்ச வருசம் கழிச்சு எனது கணவரும் இங்கு நடந்த விபத்துல அடிபட்டி இறந்து போயிட்டார். அதுக்கப்புறம், நான் அநாதையாகிவிட்டேன். இதனால் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. நானும், இதோ உயரத்துல இருந்து குதிச்சு செத்துடலாம்னு நினைத்தேன். ஆனா, என்னமோ முடியல. வயித்துப்பொழப்புக்காக வீட்டு வேலை, தோட்டவேலைனு செஞ்சேன். அப்புறம் வயது ஆக ஆக என்னால முடியல. அதனால, என்னை யாரும் வேலைக்கு வச்சிக்கல.

அடுத்த சாப்பாட்டுக்கே வழி கிடையாது. இங்கு எங்காவதுதான் தூங்குவேன். சில நேரம் யாராவது வந்து சாப்பாடு தருவாங்க. இப்படி கொஞ்சம் நாள் ஓடிச்சு. சுற்றுலாத்தலம் என்பதால இந்த ஏற்காட்டுல நிறைய ஹோட்டல் இருக்குது. அங்க போய் நின்னா சுற்றுலா வருபவர்கள் கொஞ்சம் சாப்பாடு தருவாங்கனு நினைச்சு கடை முன்னாடி தவம் கிடப்பேன். ஆனால், ஏதோ ஒண்ணு, ரெண்டு பேருதான் தருவாங்க. இதுபோல ரொம்ப நாள் நின்னதால, ஒரு நாள் கடைக்காரன் என்கிட்ட சண்டைக்கு வந்தான். ``சனியனே உன்னால யாரும் வரமாட்டங்கிறாங்க.

`சாகலாம்னுகூட தோணுச்சு... ஆனா, இப்போ நானே சம்பாதிக்கிறேன்’ - 80 வயது மூதாட்டியின் நம்பிக்கை குரல்!

இங்கிருந்து போயிடு. இல்லன, சுடுதண்ணிய பிடிச்சி மூஞ்சில ஊத்திடுவேன்னு" கோபமா கெட்ட வார்த்தையில திட்டினான். ரொம்ப பசியா இருக்கிற நேரத்துல பிச்சை கேட்டிருக்கேன். அதுல கிடைக்கிற பணத்தை வச்சி கொஞ்சம் நாள் பொழப்ப ஓட்டினேன். ஒரு நாள் இல்ல பல நாள், 'நீ எல்லாம் எதுக்கு இருக்கிற? போற வயசுதான போய் சேரவேண்டியது தானே...'ன்னு  பலபேர் திட்டுனதுண்டு. அப்ப எல்லாம் ஏன் இன்னும் சாகலனு தோணும். ஒரு தடவ இல்ல பல தடவ செத்துப் போயிடலாம்னு நினைச்சேன். ஒரு மாசத்துக்கு மேல சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்தேன். அதுக்கும் மேல என்னால முடியல.

ஏற்காடு முழுவதும் கால்நடையா சுத்துவேன். ஏற்காட்டுல ஓட்டல் ஏராளமா இருக்கிறதால உணவுக் குப்பை நிறைய வரும். அங்க போனா உணவு கிடைக்கும்னுதான் அங்க போனேன். ஆனா, அங்க தண்ணி பாட்டில், சாராய பாட்டில் நிறைய கிடந்தது. அப்பதான் ஒரு முடிவு செஞ்சேன். எதுக்கு கண்டவன்கிட்டே திட்டு வாங்கணும், இந்தக் குப்பையில கிடக்கும் பாட்டில பொறுக்கி வித்தா காசு கிடைக்கும். அதிலிருந்து வரும் காசுல மிச்சம் இருக்கிற பொழப்ப ஓட்டலாம்னு நினைச்சேன். அன்னையில இருந்து இதே வேளைதான் எனக்கு. இப்ப நான் யாருகிட்டயும் யாசகம் கேக்கிறதில்ல.

`சாகலாம்னுகூட தோணுச்சு... ஆனா, இப்போ நானே சம்பாதிக்கிறேன்’ - 80 வயது மூதாட்டியின் நம்பிக்கை குரல்!

நானே சுயமா சம்பாரிச்சு சாப்பிடுறேன். முன்னெல்லாம் துரத்தி அடிச்ச கடைக்கே போயி சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன். இப்ப நான் யார நம்பியும் இல்ல. அந்த ஆண்டவனை நம்பிதான் இருக்கேன். என்னோட உயிர சீக்கரம் எடுத்துக்கிட்டு போயிடு சாமினு கேட்டுக்கிட்டு இருக்கேன்" என்றார் அந்தப் பாட்டி. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு