Published:Updated:

``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர்' என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.
 
``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

`எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார்.

மோகன்ராஜை சந்திக்க முயன்றோம். ``இது சாதாரண விஷயம். இதை பத்திரிகையில் போட்டு பெரிசாக்கணுமா?" என்று விலகிச் சென்றவரிடம், விடாப்பிடியாக முயன்று, ஒருவழியாக மாலையில்தான் சந்தித்துப் பேசமுடிந்தது.

``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

நம்மிடம் பேசிய அவர், ``எனக்குச் சொந்த ஊர் தாந்தோணிமலைதான். அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். படிக்கிற காலத்துல கஷ்டப்படுற குடும்பச்சூழல்தான். இருந்தாலும், எங்கப்பா என்னை, `எந்த நிலையிலும் நேர்மை தவறக் கூடாது' என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்புல சொல்லிச் சொல்லி வளர்த்தார். விவசாயக் குடும்பம் என்பதால், இயற்கை மீதும் சின்ன வயசில் இருந்தே ஆர்வம். படிக்கிற காலத்தில் இருந்தே வீட்டில் நிறைய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தேன். நான் பி.எஸ்சி முடிச்சுட்டு, பன்னிரண்டு வருஷம் மெடிக்கல் ரெஃப்பாக வேலை பார்த்தேன். அப்ப, கரூர் மாவட்டம் முழுக்கச் சுத்துனப்ப, கரூர்ல காடு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், எவ்வளவு வெயில் அடிக்குதுன்னு உணர முடிஞ்சது. அதை மாத்த ஏதாச்சும் நாம பண்ணணும்னு நினைப்பேன். ஆனா, என்ன பண்றது, எப்படி பண்றதுனு புரியாம காலத்தை ஓட்டிட்டு வந்தேன். அப்போதான், 2010 ல் அரசுத் தேர்வெழுதி, ஆர்.ஐ, அதன்பிறகு பிர்கா ஆர்.ஐனு ஆகி, 2015 ல் அரவக்குறிச்சி மண்டல துணை தாசில்தாரா பணி உயர்வு பெற்றேன். அதன்பிறகு, 2018-ம் வருடம் குளித்தலைக்கு பணிமாறுதல்ல போனேன். 

``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

அதுவரை நான் பணிபுரிந்த எல்லா இடங்களிலும், `என் கையொப்பத்தை விலைபேசாதீர்'னு எழுதிப்போட்டேன். ஆனா, குளித்தலைக்குப் போன பிறகுதான், புதுசாக பட்டா மாற்ற, பட்டா பதிய வரும் நபர்களை குறிவைத்து, மரக்கன்று நடவைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்னு முடிவு பண்ணினேன். பொதுவா பட்டா மாத்த குறைஞ்சது 20 நாள்கள் ஆகும். ஆனா, `பட்டா மாற்றக் கோரும் இடத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு, அதற்கான ஆதாரங்களை கொடுப்பவர்களுக்கு 1 அல்லது 2 நாள்களுக்குள்ள பட்டா மாற்றம் செய்துதரப்படும். முதுநிலை வரிசை அங்கே பார்க்கமாட்டோம்'னு சொன்னோம். அதை என் அறையில் எழுதியும் போட்டேன். உடனே, பலரும் ஆர்வமா மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு, அதை போட்டோ எடுத்துகிட்டு, பட்டா மாற்றம் செய்ய வந்தாங்க. 'உண்மையா நட்டுருக்காங்களா'னு நான் அப்பப்ப போய் திடீர் சோதனையும் செய்வேன். 

``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

இப்படி குளித்தலையில் பணிபுரிந்தவரையில், நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி மரக்கன்றுகளை நட்டுட்டு, அதற்கான ஆதாரத்தோட பட்டா மாத்திக்க வந்தாங்க. அதன்பிறகு, கடந்த எம்.பி தேர்தல் நடந்தன்னைக்கு, குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வரும் 62 பூத்கள்ல மரக்கன்றுகள் நட்டோம். இப்போ, கரூருக்கு பணிமாறுதல்ல வந்து 15 நாள்தான் ஆவுது. இங்கேயும் இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல், கரூரில் உள்ள ஒவ்வொருத்தரும் மரக்கன்றுகளை ஏதோ ஒரு வகையில் நடவும், மற்றவர்களை நடவைக்க வலியுறுத்தவும் செய்யணும். இல்லைன்னா, நாட்டிலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக மாறக்கூடும்" என்று எச்சரித்து முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism