Published:Updated:

உத்தரகாண்ட்: பெற்றோர் இல்லாமல் தவிக்கும் 3 வயது குழந்தை!

விகடன் விமர்சனக்குழு
உத்தரகாண்ட்: பெற்றோர் இல்லாமல் தவிக்கும் 3 வயது குழந்தை!
உத்தரகாண்ட்: பெற்றோர் இல்லாமல் தவிக்கும் 3 வயது குழந்தை!
உத்தரகாண்ட்: பெற்றோர் இல்லாமல் தவிக்கும் 3 வயது குழந்தை!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து, இரண்டு கால்களும் முறிந்த நிலையில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை, பெற்றோரும் இல்லாமல் தற்போது எங்கு செல்வது? என தவித்து வருகிறது.

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 1000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இரண்டு கால்களும் முறிந்த நிலையில், 3 வயது குழந்தை ஒன்று மீட்பு குழுவினரால் நேற்று மீட்கப்பட்டது. 

டேராடூனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தையின்  வயது மூன்றுதான் என்பதால், அக்குழந்தையினால் தனது பெற்றோர் யார், எந்த ஊர்? என்பது குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்க இயலவில்லை.

இந்நிலையில் ஓரளவு குணமாகிவிட்ட அந்த குழந்தை, மருத்துவமனையில் நன்கு கவனிக்கப்பட்டு வருகிறபோதிலும், அது தனது பெற்றோரை தேடத்தொடங்கி உள்ளது. ஆனால் பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என்பதால், அந்த குழந்தை எங்கு செல்வது? என தெரியாமல் தவித்து வருகிறது.

##~~##
அதே சமயம் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் யார்? என்பதை கண்டறிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.