Published:Updated:

உத்தரகாண்டில் இன்னும் 15 நாட்களுக்கு மீட்புக் குழு தங்கியிருக்கும்: ஷிண்டே

டேராடூன்: உத்தரகாண்டில் இன்னும் 15 நாட்களுக்கு மீட்புக் குழு தங்கியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து இன்று டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த சுஷில் குமார் ஷிண்டே,
"உத்தரகாண்டில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணிகள் முடிந்ததும், மிக் - 17 ரக ஹெலிகாப்டர்கள் உத்தரகாண்டில் இருந்து கிளம்பிவிடும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 15 நாட்களுக்கு விமானப் படை ஹெலிகாப்டர்கள் இங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

உத்தரகாண்டில், மீட்புப் பணியின் போது நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதையும், அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

##~~##
நிவாரணப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு உத்தரகாண்ட் மாநில செயலாளரை வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.