Published:Updated:

உயிரை பறிக்கும் அனால்ஜின், பியாக்லிடாசோன் மருந்துகளுக்கு தடை

உயிரை பறிக்கும் அனால்ஜின், பியாக்லிடாசோன் மருந்துகளுக்கு தடை
உயிரை பறிக்கும் அனால்ஜின், பியாக்லிடாசோன் மருந்துகளுக்கு தடை
உயிரை பறிக்கும் அனால்ஜின், பியாக்லிடாசோன் மருந்துகளுக்கு தடை

புதுடெல்லி: ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைந்து மரணத்தை உண்டாக்கும் பியாக்லிடாசோன், அனால்ஜின் மருந்துகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

1977ஆம் ஆண்டில் அனால்ஜின் மருந்துக்கு அமெரிக்காவிலும், 1997ஆம் ஆண்டில் ஸ்வீடனிலும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் தடை உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு நம்நாட்டில் தற்போதுதான் இந்த மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தை பயன்படுத்துவதால் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைந்து மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பியாக்லிடாசோன் மற்றும் அதனை கூட்டுப்பொருளாக கொண்டுள்ள மருந்துகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இது நோயாளிகள், டாக்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மருந்து நிறுவனங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டீ.ஜி.ஷா இதுகுறித்து கூறுகையில், பியாக்லிடாசோன் மருந்தை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்து இந்தியாவில் 2011ஆம் ஆண்டிலிருந்து விற்பனையாகி வருகிறது. இதனால் எதிர்விளைவுகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

##~~##
இந்த மருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துக்கு தடை விதிப்பதால் நோயாளிகள் இதைக் காட்டிலும் 3 முதல் 4 மடங்கு வரை விலையுள்ள மருந்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
பியாக்லிடாசோன் மருந்துக்கு 2011ஆம் ஆண்டில் பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்னும் பல நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த மருந்தும் அதன் கூட்டு மருந்துகளும், நம் நாட்டில் ஆண்டிற்கு ரூ.600 கோடிக்கு விற்பனையாகிறது.