Published:Updated:

தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்?

விகடன் விமர்சனக்குழு
தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்?
தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்?
தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்?

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவசர சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் வரும் என்று கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய தகவல் ஆணையம், காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 6 முக்கிய பெரிய கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்று கூறியிருந்தது.

இதன்படி அரசியல் கட்சிகள், தாங்கள் பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளிடமிருந்து பெற்ற நன்கொடைகள் மற்றும் செலவினங்கள் போன்ற முக்கிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கோருவோருக்கு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கட்சி பேதம் பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு எதிராக அலறி துடித்தன.

கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவை கூறிவந்தன.

இந்நிலையில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் விதமாக அவசர சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

##~~##
அதே சமயம் இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி அதன் பிறகே அவசர சட்டத்தை கொண்டு வருவது என, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.