Published:Updated:

ராயல - தெலுங்கானா: காங்கிரஸ் புதிய திட்டம்!

விகடன் விமர்சனக்குழு
ராயல - தெலுங்கானா: காங்கிரஸ் புதிய திட்டம்!
ராயல - தெலுங்கானா: காங்கிரஸ் புதிய திட்டம்!
ராயல - தெலுங்கானா: காங்கிரஸ் புதிய திட்டம்!

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும்விதமாக,  ராயலசீமா பகுதியில் உள்ள 2 மாவட்டங்களை இணைத்து ராயல - தெலுங்கானா தனிமாநிலம் உருவாக்குவதென்று காங்கிரஸ் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும், இது தொடர்பாக அக்கட்சி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை இனியும் புறக்கணிக்க முடியாது என்ற நெருக்கடியான நிலை மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க காங்கிரஸ் மேலிடம் ஏறக்குறைய ஒப்புதல் அளித்துவிட்டது. அதே சமயம் தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க ஆந்திர கடலோர மற்றும் ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதில்  ராயல சீமா பகுதி மக்கள்தான் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் தனித் தெலுங்கானா மாநிலம் அமைந்தால், ராயல சீமா பகுதியையும் தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம் என்று காங்கிரஸ் மேலிடம் அச்சப்படுகிறது.

##~~##
இதன்காரணமாக தனித் தெலுங்கானா மாநிலத்திற்கான மாவட்டங்களை பிரிக்கும்போது, ராயல சீமா பகுதியை செங்குத்தாக பிரித்து, ரெட்டி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் அனந்தபுர் மற்றும் குர்னூல் ஆகிய மாவட்டங்களை புதிய தெலுங்கானா மாநிலத்துடன் இணைத்துவிடலாமா என காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் ராயல சீமா பகுதியிலிருந்து தனி மாநில கோரிக்கை எழாது என்றும், அதே சமயம் ரெட்டி சமூகத்தினரை திருப்திபடுத்தியதுபோன்றும் இருக்கும் எனக்  கருதுவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.