Published:Updated:

கோவையில் சுப்பிரமணியசாமி உருவப்படம் மீது முட்டை வீசி பேனர் கிழிப்பு: நாம் தமிழர் அமைப்பினர் கைது

விகடன் விமர்சனக்குழு
கோவையில் சுப்பிரமணியசாமி உருவப்படம் மீது முட்டை வீசி பேனர் கிழிப்பு: நாம் தமிழர் அமைப்பினர் கைது
கோவையில் சுப்பிரமணியசாமி உருவப்படம் மீது முட்டை வீசி பேனர் கிழிப்பு: நாம் தமிழர் அமைப்பினர் கைது
கோவையில் சுப்பிரமணியசாமி உருவப்படம் மீது முட்டை வீசி பேனர் கிழிப்பு: நாம் தமிழர் அமைப்பினர் கைது

கோவை: கோவை, குனியமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சுப்பிரமணியசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுப்பிரமணியசாமி பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியசாமி, 'சமீபகாலமாக தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் சட்டம்,ஒழுங்கை காப்பாற்ற சிறப்பு குழு அமைத்து இதுபோன்ற கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்தின் மூலம் 2500 கோடி ரூபாய் பணம் வீணாகி விட்டது. சோனியா மற்றும் கருணாநிதியிடம் இந்த தொகையை வசூல் செய்ய வேண்டும்'' என கூறினார். இதனையடுத்து சுப்பிரமணியசாமி கல்லூரியில் இருந்து கிளம்பி சென்றார்.

##~~##
இந்நிலையில் சுப்பிரணியசாமி கல்லூரிக்கு வந்துள்ள தகவல் அறிந்த நாம் தமிழர் அமைப்பினர் கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். கல்லூரி வாயிலில் இருந்த காவல் துறையினர் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணிய சாமியை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் மீது முட்டைகளால் தாக்கிய நாம் தமிழர் கட்சியினர், பேனர்களையும் அடித்து, உடைத்து, கிழித்தனர். இதனால் கல்லுரியின் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது.

ஜ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்து போக செய்ததில் சுப்பிரமணியசாமிக்கு முக்கிய பங்கு இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக குனியமுத்தூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ச.ஜெ.ரவி