Published:Updated:

போடோலாந்து தனி மாநில கோரி வலுத்து வரும் போராட்டம்!

போடோலாந்து தனி மாநில கோரி வலுத்து வரும் போராட்டம்!
போடோலாந்து தனி மாநில கோரி வலுத்து வரும் போராட்டம்!
போடோலாந்து தனி மாநில கோரி வலுத்து வரும் போராட்டம்!

கவுகாத்தி: போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா தனி மாநிலம் பிரிப்பது என்ற முடிவை தொடர்ந்து தற்போது அசாமில் தனி மாநில கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கடையடைப்பு, சாலை மறியல், தீ வைப்பு, ரயில் மறியல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அசாமின் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கார்பி ஆங்லாங் பகுதியில் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு போராட்டம் தளர்ந்துள்ளது. இதனை அடுத்து அங்கு போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு 4 மணி நேரங்களுக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

##~~##
ஆனால், போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து போடோ மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தால் ரயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்டம் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.