என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நீங்கியது 'பவர் கட்'!

##~##

''மின்வெட்டு அடுத்த ஆண்டாவது சீராகுமா?''

 ''ஒரு கணவர் தன் மனைவியின் பிறந்த நாளுக்காக கேக் ஆர்டர் செய்தாராம்.

'எத்தனை மெழுகுவத்திகள் வைக்க வேண்டும்?’ என்று கடைக்காரர் கேட்டார்.

கணவரின் பதில்: 'வழக்கம்போல முப்பதுதான்!’ ''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''ஜனநாயக முறையில் ஆட்சி நடத்துவது என்றால் என்ன?''

''மக்கள் ஓட்டளித்து பெற்ற ஆட்சியைப் பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஆதாயம் பெறும் வகையில் நடத்துவது!''

- மா.சித்தன், திருப்பாச்சேத்தி.

''ஆறு மாசம்கூட ஆகவில்லை, சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வந்துவிட்டாரே?''

நானே கேள்வி... நானே பதில்!

''என்னங்க நீங்க, அதுதான் ஜெயலலிதா முன்னமே சொன்னாங்களே, 'விரைவில் 'பவர் கட்’ சரியாகும்’ என்று!''

- தமயந்தி, நாகப்பட்டினம்.

''இன்றைய கல்விமுறை எப்படி இருக்கிறது?''

''உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. அந்தக் கல்லூரியைச் சுற்றிலும் வீடுகள் இருந்தன. அந்த வீட்டில் வசிப்பவர்களின் நாய்கள் அடிக்கடி கல்லூரி வகுப்புகளுக்குள் வந்து படுத்துக்கொள்ளும். ஆசிரியர்களும் அதைப் பொருட்படுத்துவது இல்லை. திடீரென்று ஒருநாள் ஒரு பேராசிரியருக்கு ஆத்திரம் வந்ததாம். மாணவர்களைப் பார்த்து கோபத்துடன் சொன்னாராம், 'இந்த நாயை விரட்டுங்கள். போன வருஷமே இந்த நாய் இந்த கோர்ஸை முடித்துவிட்டது!’ ''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

'' 'எங்கள் கட்சியில் தலைவர்கள் அதிகம் இருப்பதுதான் பிரச்னை!’ என்று சொன்ன சோனியா, தேர்தலில் தோல்வி அடைந்த மாநில நிர்வாகிகளை மாற்றுவதிலும் மும்முரம் ஆகிவிட்டாரே?''

''தலைவர்கள் நிறைய இருப்பது பிரச்னை இல்லை. அவர்கள் தலைவர் களுக்கு உரிய தகுதிகளுடன் இல்லை என்பதுதான் பிரச்னை!''

- மணிமொழி, கம்பம்.

''ஏப்ரல் 1-ல் ஏமாந்தீர்களா?''

''பெங்களூரில் ஒரு எஃப்.எம். சேனல், தாங்கள் ஏப்ரல் 1 அன்று நந்தி ஹில்ஸ் பகுதியில் புதிய ஸ்டுடியோ அமைப்பதாகவும் இந்தி நடிகைகள் பிபாஷா பாசுவும் கேத்ரீனா கைஃபும் அதைத் திறக்கவிருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது. அது ஏப்ரல் 1 என்றுகூட ஞாபகம் இல்லாமல், நந்தி ஹில்ஸ் பகுதியில் கிட்டத்தட்ட 6,000 பேர் குவிந்து இருக்கின்றனர். அந்தப் பகுதி தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், கீழே டிக்கெட் எடுத்துக்கொண்டுதான் மேலே நந்தி ஹில்ஸுக்குச் செல்ல வேண்டும். மேலே ஏறிப் பார்த்தால், ஸ்டுடியோவையும் காணோம், நடிகைகளையும் காணோம். 'வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கூட்டம் வருவதுஇயற்கை தான். ஆனா, இவ்ளோ கூட்டம் வராதே’ என்று குழம்பிப்போய் இருக்கிறார்கள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள். 3 மணி நேரத்தில் தோட்டக்கலைத் துறைக்கு டிக்கெட் மூலம் வந்த வருமானம் 70 ஆயிரமாம். நடிகைகளைப் பார்க்க வந்து ஏமாந்தவர்கள் மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இடத்தைக் காலி செய்திருக்கிறார்கள். என்னைக் கேட்கறீங்களா? ஓட்டு போட்ட பாவத்துக்கு அப்பப்போ வந்துபோற மின்சாரத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மின் கட்டண உயர்வுனு செய்தி வந்துச்சுங்களே... அவ்ளோதாங்க நம்ம ஏப்ரல் ஃபூல்!''

- ஆத்மாநாம், மதுரை.

''தற்போதைய சூழலில் தமிழகத்தில் எந்தத் துறை அதிகாரிகள் தங்கள் கடமையை மிகச் சரியாகச் செய்கிறார்கள்?''

''இதில் என்ன சந்தேகம்? மின் வாரிய அதிகாரிகள்தான்! ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் கச்சிதமாக கரன்ட் கட் செய்கிறார்களே!''

- பி.கணேசராஜா, பில்லங்குழி.

நானே கேள்வி... நானே பதில்!