Published:Updated:

ஷில்பா வீட்டு கல்யாணம்

க.நாகப்பன்

ஷில்பா வீட்டு கல்யாணம்

க.நாகப்பன்

Published:Updated:
##~##

'நம்ம வீட்டுக் கல்யாணம்’ ஷில்பா வீட்டில் கல்யாணம்!

 விதவிதமான கல்யாணங்களைத் தொகுத்து வழங்கிய அனுபவமோ என்னவோ, மாநில-கலாசார எல்லைகள் தாண்டிய தனது காதல் திருமணத்தை, அழகிய நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடத்தி இருக்கிறார். ஷில்பாவிடம் காதல் திருமண அனுபவத்தைக் கேட்டேன்...  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மத்தியப்பிரதேசம், இந்தூர்க்காரர் பரத். ஃபைனான்ஸ் அனலிஸ்ட். என் ஃப்ரெண்ட் திலீப் மூலமா எனக்கு அறிமுகம். முதல் தடவை ஒரு காஃபி ஷாப்ல 'ஹாய்’ சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ஆறு மாசம் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான். திடீர்னு ஒரு நாள் பூங்கொத்தோடு வந்து 'ஐ லவ் யூ’ சொன்னார். உடனே எதுவும் சொல்லலை. மூணு நாள் யோசிச் சுட்டு எல்லாம் சரியா வரும்னு நம்பிக்கை வந்த பிறகு, நானும் 'ஐ லவ் யூ’ சொன்னேன். அடிக்கடி விதவிதமா பொக்கே அனுப் பிட்டே இருப்பார். நாலு வருஷம் காதலிச் சோம். அப்புறம் என் வீட்ல விஷயத்தைச் சொன்னேன். பரத் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், என் அப்பா, அம்மா, தங்கச்சினு எல்லாருக்கும் ரொம்பப் பிடிச் சிருச்சு. அதுலயும் 'நீ கொடுத்துவெச்சவ... கோபப்படாத, திட்டாத, அடிக்கடி சின்னச் சின்னதா காமெடி பண்ணிச்

ஷில்பா வீட்டு கல்யாணம்

சிரிக்கவைக்கிற ஹஸ்பெண்ட் கிடைச்சிருக்கார் உனக்கு’னு என் தங்கச்சி சொல்லிட்டே இருக்கா.  

பரத்... கேமரா காதலர். என்னை வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்கிறார். எனக்குப் பிடிச்ச மேகியை விதவிதமா சமைச்சுத் தர்றார். எனக்காகத் தமிழ் கத்துக்கிறார். 'முன்தினம் பார்த்தேனே...’, 'அடியே கொல்லுதே...’னு ரொமான்ஸ் பாட்டாப் போட்டு என்னைக் கொஞ்சிட்டே இருக்கார். 'ஷில்பு’னு செல்லமாக் கூப்பிடுவார். நான் அவரை 'மகாராஜா’னு ஆசையாக் கூப்பிடு வேன். மாமனார், மாமியார்கிட்ட பேச, இந்தி கத்துக்கிட்டேன்.

விஜய் டி.வி-யில் ரெண்டு வருஷம் 'நம்ம வீட்டுக் கல்யாணம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதில் இந்த மார்ச் 25-ம் தேதியை என்னால மறக்கவே முடியாது. சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒருசேர அனுபவிச்ச நாள். ஒரு கண்ல ஆனந்தக் கண்ணீர் வருது. இன்னொரு கண்ல அழுவாச்சிக் கண்ணீர் வருது.

அன்னைக்கு என் கல்யாணத்தை நானே தொகுத்து வழங்கினேன். அது சந்தோஷம். அதுதான் நான் தொகுத்து வழங்கின கடைசி 'நம்ம வீட்டுக் கல்யாணம்’ நிகழ்ச்சி!''

-இதழ்கள் புன்னகைக்க... விழிகள் நனைந்து இருக்கின்றன ஷில்பாவுக்கு!