Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
தமிழில்: உஷாதரன்
வெளியீடு: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி-2.
பக்கங்கள்: 328விலை:

விகடன் வரவேற்பறை

250

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் வரவேற்பறை

ஜெர்மனி, ஹிட்லரின் நாஜி இனவெறி ஆட்சியின் கீழ் இருந்தபோது, 14 வயதான ஆனி ஃபிராங்க் எழுதிய டைரிக் குறிப்புகளின் தொகுப்பு இது. நாஜிக்களின் பார்வையில் இருந்து மறைந்து வாழ்ந்தபடி எழுதிய ஆனி, பின்னாட்களில் நாஜிப் படையினரிடம் பிடிபட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, 'டைபஸ்’ தொற்றுநோய்க்குப் பலியானார். ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின், ஆனியின் தந்தை வீட்டுக்கு வந்தபோது அவளது குறிப்புகளைக் கண்டார். தலைமறைவு வாழ்க்கையின் சகிக்க முடியாத அவலம், நாஜிக்களின் அக்கிரம அட்டூழியங்கள், அத்தகைய சூழலிலும் முளைத்த காதல் என அவர் வெளிக்கொண்டுவந்த ஆனியின் எழுத்து உலக வாசகர்களைக் கண்ணீரில் மிதக்கவைத்த பதிவு இப்போது தமிழில்!

அனைத்தும்
www.about.com

விகடன் வரவேற்பறை

ங்கள் நாய் சந்தோஷமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, பறவை பார்த்தல் (bird watching) என்றால் என்ன, உங்கள் கூகுள் தேடலை ரகசியமாக வைத்துக்கொள்வது எப்படி... இப்படி எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள் இந்தத் தளத்தில். அல்ஜீமர் நோய் முதல் ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர் வரை சகல சங்கதிகளையும் பற்றிய அறிமுகங்கள், அவற்றின் அப்டேட் நிலவரங்கள்.

பாடும் நிலா பாலு!
http://myspb.blogspot.in

விகடன் வரவேற்பறை

ஸ்.பி.பி-யின் ரசிகர்களால் இயங்கும் வலைப்பூ. முழுவதும் பாடும் நிலா பாலுவின் பாடல்கள் பூத்திருக்கின்றன. ஆரம்பக் காலம் முதலான அவருடைய பாடல்களைப் பதிவேற்றி இருக்கிறார்கள் ரசிகர் கள். பாடல் வரிகள், பாடலின் பின்னணித் தகவல்கள் ஆகியவற்றையும் தந்திருப்பது பாடலை அருகில் இருந்து கேட்கும் அனுபவத் தைத் தருகிறது.  

இனியொரு விதி செய்வோம்...
இயக்கம்: கே.ராஜு

விகடன் வரவேற்பறை

பெண் கல்வியின் அவசியத்தைப் பிரசார நெடி இல்லாமல் 12 நிமிடங்களுக்குள் சொல்லும் அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் குறும்படம். நல்ல படிப் பாளியான தன் மகளைச் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தன் தம்பிக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார் அம்மா. அந்த மாணவியின் கல்விக் கனவு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ். இறுதிக் காட்சியில் அந்தச் சிறுமி தன் பாட்டியுடன் கிராமத்துச் சாலை யில் நடந்து செல்லும் காட்சி, ஒரு மென்சோகக் கவிதை.

கம்பன் கழகம்
இசை: ஷாம் பிரசன் பிரவீன்
வெளியீடு: சரிகமவிலை:

விகடன் வரவேற்பறை

75

விகடன் வரவேற்பறை

மூன்று நண்பர்கள் சேர்ந்து ஒரு படத்துக்கு இசை அமைத்தால்? கலகல வென இருக்கிறது. கவிஞர் சாரதியின் வரிகள் மழைச் சாரல். கார்த்திக், கிருஷ்ண ஐயர், மாயா குரல்களில் 'உன் கண்கள் துறுதுறு...’ விறுவிறுப்பாகக் கடந்து செல்கிறது. ஆல்பத்தின் மென்மெலடிப் பாடலான 'நீ... நான்... தனி உலகமடி...’ பாடலை அற்புதமாகப் பாடி இருக்கிறது ஹரிஷ் ராகவேந்திரா - ஹரிணி கூட்டணி. ஷியாம் பாடிய 'காதல் கடலாய்...’ தித்திக் கும் ஸ்வீட் பாசந்தி. பென்னி தயாள், ஸ்வேதா மோகன் பாடிய 'கடகட...’ பாடல் கேட்டு முடித்த பிறகும் எலெக்ட்ரிக் கிதாரின் இசை நெஞ்சுக்குள் நீண்ட நேரம் தடதடக்கிறது.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism