''வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளதே?''

''வறுமை காரணமாகவும் கடன் தொல்லை காரணமாகவும் அவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். அதைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ என்னவோ?''

- தீ.அசோகன், சென்னை-19.

''கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறந் தால் மின்வெட்டு சீராகுமா?''

''உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. நோயாளி ஒருவர் பதறியபடி டாக்டரிடம் வந்தாராம். 'டாக்டர், நீங்க கொடுத்த மருந்து என்னைக் குணப்படுத்திவிட்டது. ஆனால், நான் இப்போது நண்டைப் போல நடக்கிறேன்’ என்றாராம். அதற்கு டாக்டர் சொன்னாராம், 'நான்தான் முன்பே சொன்னேனே, இந்த மருந்தைச் சாப்பிட்டால் பக்க விளைவு இருக்கும் என்று’. ''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று நடைமுறையில் இருக்கிறதே, இந்த நிலை எப்போதுதான் மாறும்?''

''இப்ப அப்படியே தலைகீழா மாறிடுச்சு கவனிச்சீங்களா? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், வாக்கிங் போவது நல்லது. அரசியல்வாதிகளுக்கோ வாக்கிங் போகாமல் இருப்பதுதான் நல்லது.''

- வாசுகி, சேலம்.

''நாம் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணம் போகும்போதும் விபத்து நேரலாம். பிறகு ஏன் அணு உலைகளுக்கு எதிராக மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்கிறார்களே சிலர்?''

''ஆல்வின் வெய்ன்பெர்க் என்ற அறிஞர் சொன்னது இது: 'எங்கேயோ (somewhere) நடக்கும் அணு உலை விபத்து என்பது, உண்மையில் எங்கேயும் (everywhere) நடக்கும் அணு உலை விபத்து.’ ''

- நளன், கும்பகோணம்.

''நடப்பதை எல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதா மாறியதைப் போலவே தெரியவில்லையே?''

''யாருங்க சொன்னது? ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று கருணாநிதியின் முடிவுகளைத்தான் மாற்றிக்கொண்டு இருந் தார். இப்போது 'சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்குவது’ என்ற தன் முடிவையே மாற்றியிருக்கிறாரே?''

- புகழேந்தி, கடலூர்.

''இந்தியா முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொள்கிறார்களே. எப்போதுதான் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்?''

'' 'அவர் இறந்தபோது அவரது வீட்டை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவரது காரை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலைப் பூமி எடுத்துக்கொண்டது. அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது’ - 'காமராஜர் ஒரு சகாப்தம்’ நூலில் கோபண்ணா எழுதிய வரிகள் இவை. நீங்கள் சொன்ன காங்கிரஸ்காரர்கள் பாடம் கற்றுக்கொள்ள எங்கேயும் போக வேண்டியது இல்லை. காமராஜர் என்ற வரலாற்றுப் பாடம் அவர்கள் புத்தகங்களிலேயே இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது.''

- சரவணன், தஞ்சாவூர்.

''நல்ல இலக்கியம் படைக்க வேண்டும் என்றால், அதற்கு என்று நல்ல சூழலும் நல்ல மூடும் முக்கியமா?''

''பொழுதுபோக்குக்காக எழுதுபவர்களுக்குத்தான் நீங்கள் சொல்வது எல்லாம். மக்களுக் காகச் சிந்தித்து, மக்களுக்காக எழுதுபவர் களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ அவரது எழுத்துக்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சிறையிலும் சும்மா இருக்கவில்லை. சிறைக்குள் கொடுக்கப்பட்ட டாய்லெட் டிஷ்யூ பேப்பர்களில் எழுத ஆரம்பித்தார். அதுதான் 'சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற உலகப் புகழ் பெற்ற நாவலாக உருவெடுத்தது.''

- மலர், நாகப்பட்டினம்.

''இருப்பதிலேயே பிரமிக்கவைக்கும் கற்பனை எது?''

''சமயங்களில் உண்மை, கற்பனையைவிடப் பிரமாண்டமாக இருக்கும். அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ-வைப் பற்றி மோகன ரூபன் என்பவர் எழுதிய 'பிணந்தின்னிக் கழுகு’ என்ற நூலில் உள்ள தகவல் இது. 'மிகப் பெரிய அளவுள்ள ஆணுறைகளைத் தயாரித்து, அதை விமானம் மூலம் சோவியத் ரஷ்யா மீது வீசும் ஒரு திட்டம் அமெரிக்க உளவுப் படையான சி.ஐ.ஏ. வசம் இருந்தது. அந்த ஆணுறைகளின் அளவு மிகப் பெரியதாக இருந்தாலும் அதில் 'மிகச் சிறியது’ என்று ரஷ்ய மொழியில் அச்சிடவும் ஏற்பாடாகி இருந்தது. அதைப் பார்க்கும் ரஷ்யப் பெண்கள், அமெரிக்க ஆண்கள் 'அந்த விஷயத்தில்’ அசகாய சூரர்கள் என்று நினைத்துக்கொள்வார் களாம். இப்படி ரஷ்யப் பெண்கள் மனதில் அமெரிக்க ஆண்களைப் பற்றி ஒரு மதிப்பை (!) ஏற்படுத்தவும் அமெரிக்கா எத்தனித்தது. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?''

- பாரதி, தஞ்சாவூர்.