Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை!

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ புதிய கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் சங்க கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை, திருவான்மியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 65 ஆட்டோ ஸ்டாண்டுகளை சேர்ந்த டிரைவர்களின் ஆலோசனை கூட்டம் காமராஜர் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு தலைவர் சங்கர் கூறும்போது, ''தமிழக அரசு நிர்ணயித்துள்ள புதிய ஆட்டோ கட்டணம் தொடர்பாக உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள புதிய ஆட்டோ கட்டணத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், எங்கள் தொழிலுக்கு தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால், டாட்டா மேஜிக் மற்றும் அபே ஆட்டோக்களை மாநகர பகுதியில் இயங்குவதற்கு அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும்.

மாறாக டாட்டா மேஜிக், அபே வகை ஆட்டோக்களை புறநகர் பகுதியில் மட்டும் இயங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாமல் அனுமதித்தால் அவர்களும் மீட்டர் போட்டு ஓட்டுவதை கட்டாயப்படுத்துவதுடன், 3 நபர்களுக்கு மேல் ஏற்றக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இதனை கண்டித்து முதல் கட்டமாக திருவான்மியூர் வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 11 ஆம் தேதி அனைத்து ஆட்டோ டிரைவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

##~~##
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது ஆட்டோ மீட்டர் கட்டணத்தையும் அரசு மாற்றி அமைக்க வேண்டும். மாநகர பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் முறையாக விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உள்ளே சென்று பயணிகளை ஏற்றி செல்ல முறையாக அனுமதி பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ டிரைவர்களுக்கு விபத்து போன்ற காரணங்களில் குடும்பத்தை காப்பதற்காக இன்சூரன்ஸ் திட்டத்தையும் அரசு கொண்டு வரவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்