''பத்தே வார்த்தைகளில்கூட குட்டிக் கதைகள் வந்துவிட்டனவே?''

''அடப்போய்யா... சுஜாதா இரண்டே வார்த்தைகளில் கதை எழுதி இருக்கார் தெரியுமா?

கதையின் தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்.

கதை: 'ஐயோ சுட்டுடாதே!’ ''

- மதிபாரதி, சென்னை-91.

'' 'தமிழகத்தில் மின் வெட்டு இரண்டு மாதங்களில் படிப்படியாகக் குறைக்கப்படும்’ என்று ஜெயலலிதா சொல்வதை நம்பலாமா?''

''கண்டிப்பா நம்புங்க. அவங்ககிட்ட எப்பவுமே அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்செல்லாம் கிடையாது. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதைத்தானே சொல் றாங்க?''

- மித்ரா, விருதுநகர்.

'' 'அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்தால், தமிழகத்தில் பா.ம.க-தான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்கிறாரே காடுவெட்டி குரு?''

''சொல்றதுதான் சொல்றீங்க, அதுக்கு இப்படியே சொல்லிடலாமே, 'அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் நிற்காமல் இருந்தால் பா.ம.க-தான் ஆட்சியைப் பிடிக்கும்.’ எப்பூடி?''

- எம்.சுரேஷ், கடலூர்.

''ரத்தம் சிந்திப் போராடுவதற்கு மதிப்பு இருக்கிறதா?''

''அதற்கு இருக்கிறதோ இல்லையோ... அதை வைத்துப் பணம் பண்ணுபவர்களுக்கு எல்லாமே மதிப்பு வாய்ந்ததுதான். மகாத்மா காந்தி சுடப்பட்டபோது, அவரது மார்பில் இருந்து சிந்திய ரத்தம் கீழே இருந்த புல் வெளியில் படிந்தது. அந்தப் புல்லை இப்போது லண்டனில் வைத்து 8 லட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களாகிய நாம் செத்தால் புதைத்த இடத்தில் புல், பூண்டு முளைக்கும். செத்தவர் காந்தி என்பதால் அவரது ரத்தம் படிந்த புல், லட்சங்களில் ஏலம் விடப்படுகிறது. 'புகழுக்கு விலை உண்டு’ என்பதுபோல, புகழ்பெற்றவர்கள் சிந்திய ரத்தத்துக்கும் விலை இருக்கிறது போலும்!''

- பிரபாகரன், விழுப்புரம்.

''நம் தமிழக போலீஸார் உஷாராகச் செயல்படுகிறார்களா?''

''ரொம்பவே உஷாராகச் செயல்படுகிறார் கள். வங்கிக் கொள்ளையில் கேமராவில் சிக்கியவர் ஒருவர் என்று, பேக்கிரவுண்டை எல்லாம் வெட்டிவிட்டு, ஒரு காட்சியைக் காட்டி, தமிழே தெரியாத ஒருவரை அடுத்த நாளே என்கவுன்டர் செய்து கதையை முடித்தார்கள். ஆனால், மதுரவாயல் நகைக் கடைக் கொள்ளையில் ஒருவர் 10 நிமிடங் களுக்கு மேல் இருக்கும் கேமரா காட்சியைக் காட்டி, அவர் உள்ளூர்க்காரராக இருந்த போதிலும் இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கிறார்களே, இதைவிடவா உஷார் வேண்டும்?''

- எஸ்.ஜெயந்தி, மதுரை.