Published:Updated:

பராமரிப்பு பணி: சென்ட்ரல்-ஆவடி மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணி: சென்ட்ரல்-ஆவடி மின்சார ரயில்கள்  ரத்து!
பராமரிப்பு பணி: சென்ட்ரல்-ஆவடி மின்சார ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணி: சென்ட்ரல்-ஆவடி மின்சார ரயில்கள்  ரத்து!

சென்னை: வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட்டிலிருந்து, ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் நாளை முதல் வரும் 8 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வில்லிவாக்கம் - அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் நாளை முதல் 8 ஆம் தேதி வரை ரயில்வே பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

##~~##
இதனை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கத்தில் அதிகாலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து சென்ட்ரல் மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - அரக்கோணம் மின்சார ரயில்(வ.எண்.43801) 1 மணி நேர கால தாமதமாக புறப்பட்டுச் செல்லும்" என்று கூறப்பட்டுள்ளது.