Published:Updated:

சென்னை: நடைபாதை பெட்டிக்கடைகளை 2 வாரத்தில் அகற்ற உத்தரவு!

Vikatan Correspondent
சென்னை: நடைபாதை  பெட்டிக்கடைகளை 2 வாரத்தில் அகற்ற  உத்தரவு!
சென்னை: நடைபாதை பெட்டிக்கடைகளை 2 வாரத்தில் அகற்ற உத்தரவு!
சென்னை: நடைபாதை  பெட்டிக்கடைகளை 2 வாரத்தில் அகற்ற  உத்தரவு!

சென்னை: சென்னையில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளில் இடையூறாக உள்ள பெட்டிக்கடைகளை 2 வார காலத்தில் அகற்றுமாறு சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரில் மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகடைகளை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பெட்டி கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்படாததுடன், அவற்றுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாக டிராஃபிக் ராமசாமி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார், நீதிபதி சத்திய நாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி கமிஷனர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெட்டிக்கடைகளை அகற்ற மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளை விளக்கினார். அப்போது மொத்தம் உள்ள 518 கடைகளில் 339 கடைகள் அகற்றப்பட்டதாகவும், 119 கடைகள் மீதான உத்தரவு கோர்ட்டில் நிலுவையில்

##~~##
இருப்பதாகவும், மீதம் 60 கடைகள் மட்டுமே அகற்றப்பட வேண்டும் என்று கூறி, தாமதத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
இதையடுத்து அகற்றப்படாமல் உள்ள கடைகளை இன்னும் 2 வார காலத்தில் அகற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.