Published:Updated:

தினமும் ஆற்றை நீந்தி கடந்து சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!

Vikatan Correspondent

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், ஆசிரியர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக தினமும் ஆற்றில் நீந்தி பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வரும் தகவல் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றும் அப்துல் மாலிக் (40) என்ற ஆசிரியர், தினமும் காலை 9 மணிக்கு தனது உடமைகளை பாலிதீன் கவரில் போட்டு எடுத்துக் கொண்டு, காற்று நிரப்பப்பட் டயர் ட்யூப்பை நெஞ்சுப் பகுதியில் போட்டுக் கொண்டு ஆற்றில் இறங்குகிறார். சுமார் 15 நிமிடம் நீந்தி மறு கரையை அடைந்து, உடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். மீண்டும் மாலையில் இதே முறையில் வீட்டுக்கு திரும்புகிறார்.

##~~##
இது பற்றி அவரிடம் கேட்டால், "எனது வீட்டில் இருந்து பள்ளிக்கு இந்த ஆற்றை சுற்றிக் கொண்டு செல்ல 12 கி.மீ. தூரம் உள்ளது. அந்த தூரத்தை நான் பேருந்தில் சென்றால் உரிய நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல இயலாது. எனவேதான் இவ்வாறு ஆற்றில் நீந்தி சென்று பள்ளிக்குப்போய் வருகிறேன்" என்று கூறுகிறார்.
சுமார் 20 ஆண்டுகளாக அவர் இப்படித்தான் நீந்தி சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.