Published:Updated:

ஆன்லைன் மூலம் பி.எஃப். கணக்கு: மத்திய ஆணையர் தகவல்!

Vikatan Correspondent
ஆன்லைன் மூலம் பி.எஃப். கணக்கு: மத்திய ஆணையர் தகவல்!
ஆன்லைன் மூலம் பி.எஃப். கணக்கு: மத்திய ஆணையர் தகவல்!
ஆன்லைன் மூலம் பி.எஃப். கணக்கு: மத்திய ஆணையர் தகவல்!

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப். கணக்கு குறித்த விவரங்களை தொழிலாளர்கள் ஆன்லைனிலேயே அறிந்து கொள்ளும் சேவை நாளை (6ஆம் தேதி) துவங்கப்பட உள்ளதாக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலன் தெரிவித்துள்ளார்.

##~~##
இது குறித்து அவர் கூறும்போது, ''தற்போது சுமார் 5 கோடி தொழிலாளர்களின் பி.எஃப். கணக்குகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் நாளை முதல் ஆன்லைன் மூலமாகவே தங்களது இருப்பு கணக்கு குறித்து அறிந்து கொள்ளலாம்'' என்றார்.