Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

எண்ணங்களைக் கடந்தது எது?

நானே கேள்வி... நானே பதில்!

எண்ணங்களைக் கடந்தது எது?

Published:Updated:
##~##

''நம்ம தமிழ்நாட்டு எம்.எல்.ஏ-வை யாராவது கடத்திட்டுப்போனால், மாநில அரசோட நடவடிக்கை என்ன மாதிரி இருக்கும்?''

 ''ஒரு பக்கம் எம்.எல்.ஏ-வை மீட்பதற்கு முயற்சி பண்ணிட்டே இன்னொரு பக்கம், அவரோட தொகுதியில் சிறப்பு நலத் திட்டப் பணிகளை முடுக்கிவிடு  வாங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தெ.சு.கவுதமன், வத்திராயிருப்பு.

''தேர்தல் கமிஷன் புதுக்கோட்டை இடைத்தேர்தலை அறிவித்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது?''

''குதிரை ஓடிய பிறகு லாயத்துக்குப் பூட்டு போட்ட கதைதான் நினைவுக்கு வருகிறது. புதுக்கோட்டை மாநகராட்சியின் 100-வது ஆண்டு விழாவினை ஒட்டி, 50 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மக்களுக்கு விலைஇல்லா ஆடு, மாடுகள், மாணவர்களுக்கு லேப்-டாப், விதவைகளுக்கு நிதியுதவி என்று 100 சதவிகிதம் செய்து முடித்தவுடன், தேர்தல் தேதியை அறிவிப்பதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன என்று சொல்வதும் கேலிக்கு உரியவை. ஒரு தொகுதியின் மக்கள் பிரதிநிதி மரணமுற்ற தினத்தில் இருந்தே நன்னடத்தை அமலுக்கு வர தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.''

- ஆ.கே.சுந்தரம். சென்னை-26.

''மௌனம் என்பது வேறு; அமைதி என்பது வேறா?''

''ஜான்கேஜ் என்பவர் 'மௌனம்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்...

எந்தச் சப்தமும் வராத ஓர் அறையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் நுழைந்தபோது இரண்டு சப்தங்களைக் கேட்டார். 'என்ன சப்தம்’? என்று கேட்டபோது, 'ஒன்று, மனம் (MIND) வேலை செய்கின்ற சப்தம் - நரம்பு மண்டலம். இரண்டாவது, ரத்த ஓட்டம் இயங்குகின்ற சப்தம். இதுநாள் வரை நான் இந்தச் சப்தங்களைக் கேட்டதே இல்லை’ என்று கேஜ் சொன் னார். 'ஆம். அமைதி வேறு; மௌனம் வேறு. அமைதி எங்கு வேண்டுமானாலும் இருக்கும். போருக்குப் பிறகுகூட அமைதி இருக்கலாம். புயலுக்குப் பிறகுகூட அமைதி இருக்கலாம். அமைதி மேலோட் டமானது... மௌனம் உள் மையத்தில் இருந்து ஏற்படுவது. மூன்று துறவிகள் மௌனம் அனுஷ்டிப்பது என்று தீர்மானித்தார்கள். ஐந்து நிமிடம் சென்றிருக்கும். முதல் துறவியின் முகத்தில் கரி இருந்ததைப் பார்த்தார், இரண்டாவது துறவி. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

'உங்கள் முகத்தில் கரி’ என்றார்.

முதலாவது துறவி, 'நீ பேசிவிட்டாய்’ என்றார். மூன்றாம் துறவி, 'நான் மட்டும்தான் பேசவில்லை’ என்றார்.

நானே கேள்வி... நானே பதில்!

மௌனம் வார்த்தைகளைக் கடந்தது. மொழிகளைக் கடந்தது மட்டுமல்ல; எண்ணங்களையும் கடந்தது.''

- சந்திரா சிவபாலன், திருச்சி-26.

''அண்ணாவின் மேடைப் பேச்சில் மிகவும் பிடித்தமான வரிகள்?''

'' 'நான் சென்னையில் இருந்து செட்டிநாட்டுக்குச் செல்கிறேன். சென்னையில் வீடுகள் இல்லா மனிதர்கள்... செட்டிநாட்டிலே மனிதர்களே இல்லாத வீடுகள்!’ ''

- சித.கருணாநிதி, மருதூர் தெற்கு.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism