Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

பிரீமியம் ஸ்டோரி
நானே கேள்வி... நானே பதில்!

''இந்த அனுஷ்காவிடம் என்ன இருக்கிறது என்று கோடிகளில் கொட்டிக் கொடுத்து அப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்?''

''அனுஷ்காவின் இதழ், இடை போன்ற கவர்ச்சிப் பிரதேசங்கள்  எதுவுமே 'என்னைப் பார்... என் அழகைப் பார்’ என்று துருத்தா தவை... உறுத்தாதவை. அதேசமயம், மழை யில் நனைந்து, பிகினியில் உருண்டு புரளும் கவர்ச்சித் தருணங்களில்... அனுஷ்காவின் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அத்தனை சாந்தமாக அழகின் எந்தத் திமிரும் தொனிக் காத ஒரு வசீகரப் புன்னகையை அது சூடி இருக்கும். 'கவர்ச்சிப் பிரதேசங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை உண்டாக்கும் சேதங்களுக்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பாகாது!’ என்பதுபோல ஒரு குழந்தைத்தன எக்ஸ்பிரஷனைச் சுமந்து இருக்கும் அனுஷ்கா முகம். அது மிக அரிதான அழகு. அதனால்தான் 'கோடி லேடி’யாக வலம்வருகிறார் அனுஷ்!''

- கார்த்தி, சென்னை-86.

''திருட்டு டி.வி.டி-க்களை ஒழிக்கவே முடியாதா?''

''அதில்கூட பார்க்கச் சகிக்காத அளவுக்கு வெளியாகும் மொக்கைப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக் கிறது. கவலைப்படாதீர்கள்... கூடிய சீக்கிரம் அப்படியான படங்களே, அந்த பிசினஸைக் காலி செய்துவிடும்!''

- சிவா, மதுரை.

##~##

''ஐ.பி.எல்-5... ருசிக்கிறதா?''

''கூடிய விரைவிலேயே 20 ஓவர்களை 10 ஓவர்களாகக் குறைத்து, சிக்சர் அடித்தால் சியர் கேர்ள்ஸ் மைதானத்துக்குள் ஓடி வந்து பேட்ஸ்மேனுக்கு 'கட்டிப்புடி வாழ்த்து’ கொடுத்து, ஆண் - பெண் இணைந்து ஆடும் அணிகளுக்கு அனுமதி அளித்து... கொஞ்சம் பொறுங்கள்... ரசிகர்களின் ஆதரவைப் பெற ஐ.பி.எல். கிச்சனில் எந்த மசாலாவும் சாத்தியமே!''

- ஆறுமுகம், பெங்களூரு-7.

''ஊருக்குச் சொல்வதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பது சிரமமான காரியமா?''

''சிரமம்தான். ஓர் எடுத்துக்காட்டு இதோ... கேரளத்தில் சுகாதன் என்கிற 61 வயது நபர், தற்கொலைக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு, அதற்கான விருதும் பெற்றவர். ஆனால், அண்மையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்!''

- பெ.ராமு, விழுப்புரம்.

நானே கேள்வி... நானே பதில்!

''சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கலாமா?''

''சச்சின் மும்பையில் 100 கோடியில் வீட்டைக் கட்டியிருக்கிறார். பாகிஸ்தானில் இம்ரான் கான் 100 கோடியில் புற்றுநோய் மருத்துவமனை கட்டியிருக்கிறார். இது சமீபத்தில் ஃபேஸ்புக்கில் வந்த ஓர் ஒப்பீடு. இப்போது நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்!''

- மு.இளவரசு, காஞ்சிபுரம்.

'' 'இலங்கையில் தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?''

''எந்த காந்தி வழியில்... சோனியா காந்தி வழியிலா?''

- மு.பெரியசாமி, விட்டுக்கட்டி

'' 'இனிமேல் இடைத்தேர்தல்களில் போட்டியிட மாட்டோம்’னு ராமதாஸ் அறிவிச்சுட்டாரே?''

''இந்த அமெரிக்க மாப்பிள்ளை, மாப்பிள் ளைத் தோழன் மாதிரியான கேரக்டர்ல எல்லாம் நடிக்காமல், ஸ்ட்ரெயிட்டா2016-ல சி.எம்-தானோ?

- தெ.சு.கவுதமன், வத்திராயிருப்பு.

''இன்றைய இளைஞர்கள் பலர் சே குவேரா படத்துடன் கூடிய டி - ஷர்ட்களை அணிகின்றனர். இதேபோல் நமது இந்திய விடுதலை வீரர்களின்படங் கள் இளைஞர்களால் அணியப்படுவதைப் பெருமை யாகக் கருதியது உண்டா?''

''ஓ... உண்டே!

வல்லிக்கண்ணனின் சுயசரிதையான  'நிலைபெற்ற நினைவுகள்’ நூலில் குறிப் பிடப்பட்டுள்ள விஷயம் இது...

'பகத் சிங் தூக்கிலிடப்பட்ட செயல், இந்தியா முழுவதும் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. பகத் சிங் முதலானோர்பற்றிய பாடல்களும் வரலாற்றுப் பிரசுரங்களும் வெளிவந்தன. பகத் சிங்கின் படங்கள், அவர் படம் பொறித்த பேட்ஜ்கள் விற்பனைக்கு வந்து விரைவில் விற்றுப்போயின. அந்த பேட்ஜ்களை மாணவர்கள் வாங்கித் தங்கள் சட்டைகளில் குத்திக்கொண்டு பெருமையாகத் திரிந்தார்கள். சட்டைகளுக்கு 'பகத் சிங் காலர்’ என்று அந்த வீரர் அணிந்திருந்த சட்டையில் உள்ள காலர்

நானே கேள்வி... நானே பதில்!

மாதிரியான கழுத்து அமைப்பு தைப்பதில் தையல்காரர்கள் ஆர்வம் காட்டினர்.''

- ஜனநேசன், காரைக்குடி.

''சிவன் கனவில் வந்து சொன்னதாலேயே நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தேன் என்று மதுரை ஆதீனம் கூறியிருப்பது நம்பும்படியாக இல்லையே?''

''உங்களுக்கும் இஷ்க்கு... இஷ்க்கு என்றா கேட்கிறது. எனக்கும் இஷ்க்கு... இஷ்க்கு என்றுதான் கேட்கிறது!''

- ப.மாறன், கடலூர்.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு