Published:Updated:

சீமாந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீமாந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்?
சீமாந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்?

சீமாந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சீமாந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்?

புதுடெல்லி: சீமாந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஹைதராபாத்தை தெலுங்கானாவின் நிரந்தர தலைநகராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனினும் 10 ஆண்டுகள் வரை தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதிகளுக்கு பொது தலைநகராக ஹைதராபாத்தை வைத்திருக்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஹைதராபாத் மாநகரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது. ஹைதராபாத்தின் சட்ட ஒழுங்கு, கல்வி, நில வருவாய் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றாலும், அது யூனியன் பிரதேசமாக இருக்காது என தெரியவந்துள்ளது.

சீமாந்திரா தலைநகர்


இந்நிலையில், சீமாந்திரா மக்களை சமாதானப்படுத்துவதற்காக விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் இது அமைச்சரவைக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு