Published:Updated:

வீட்டில் சட்டவிரோத தொலைபேசி எக்ஸ்சேஞ்ச்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டில் சட்டவிரோத தொலைபேசி எக்ஸ்சேஞ்ச்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
வீட்டில் சட்டவிரோத தொலைபேசி எக்ஸ்சேஞ்ச்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

வீட்டில் சட்டவிரோத தொலைபேசி எக்ஸ்சேஞ்ச்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வீட்டில் சட்டவிரோத தொலைபேசி எக்ஸ்சேஞ்ச்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

புதுடெல்லி: தனது வீட்டில் சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக, முன்னாள் மத்திய  அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல் முன்னாள் அதிகாரிகள் கே.பிரம்மநாதன் மற்றும் எம்.பி.வேலுசாமி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், தயாநிதி மாறன், தனது சென்னை போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக 300 க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் எக்ஸ்சேஞ்ச் போல செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது.

அந்த இணைப்புகளை பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் சட்டவிரோதமாக இணைத்து,  பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

##~~##
இது தொடர்பான வழக்கு விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனடிப்படையிலேயே, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு