Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ராமதாஸுக்குப் பிடித்த நடிகை!

நானே கேள்வி... நானே பதில்!

ராமதாஸுக்குப் பிடித்த நடிகை!

Published:Updated:

''பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தி.மு.க-வும் ஆர்பாட்டம் நடத்தியதே?''

 ''நா.காமராசன் எழுதிய கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன... 'இவர்கள் புலியோடு சேர்ந்துகொண்டும் வேட்டையாடுகிறார்கள், மானோடு சேர்ந்துகொண்டும் ஓடுகிறார்கள்!''

- தா.மு.இக்பால், தஞ்சாவூர்.

''கருணாநிதியின் பேச்சில் ஸ்டாலினுக்குப் பிடிக்காத வாக்கியம் என்ன?''

''அண்ணா வழி நடப்போம்.''

நானே கேள்வி... நானே பதில்!

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''ராமதாஸுக்குப் பிடித்த நடிகை?''

''நயன்தாரா! அவர்தானே அடிக்கடி கூட்டணியை மாற்றுகிறார்.''

- ஆ.ரமணி, சென்னை-17.

''பொது மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் முக்கிய வித்தியாசம் என்னவோ?''

''பொது மருத்துவமனையில், நோயாளி பாதி குணமாகும் முன்பே அவனைத் தெருவுக்குத் துரத்திவிடுகிறார்கள். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சாகும் வரையில் அவனை வெளியே அனுப்புவது இல்லை.''

- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

''நிகழ்காலத்தில் தொலைதல் என்றால் என்ன?''

''என்னதான் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் நீங்கள் மாங்குமாங்கு என ஸ்டேட்டஸ் அப்டேட் கள் போட்டாலும் யாரும் எட்டிப் பார்க்காமல் இருந்தாலோ, 'லைக்’ஸ் இல்லாமல் இருந்தாலோ... அப்போ உங்களுக்குள் தோன்றுமே ஓர் உணர்வு... அதான் சார் 'நிகழ்காலத்தில் தொலைதல்’ என்பது!''

- வி.ராஜாமணி, சென்னை-75.

''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்று ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் எப்படி?''

நானே கேள்வி... நானே பதில்!

''மன்மோகன் சிங் வீட்டில் தட புடலான விருந்து. தி.மு.கழக எம்.பி - யான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாக வந்த பத்திரிகைச் செய்தி இது: 'சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, செட்டிநாட்டு சிக்கன் என்று அசைவமும் சப்பாத்தி, குருமா என்று சைவமுமாகக் கலக்கிவிட்டார்கள். நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பினோம்.’ அதே பத்திரிகையில்தான் மறுநாள் பெட்ரோல் விலை 7.50 ரூபாய் ஏற்றப்பட்ட செய்தியும் வெளியானது!''

- தா.மு.இக்பால், தஞ்சாவூர்.

''சொல்வது எளிது, செய்வது அரிது... ஓர் உதாரணம்?''

''சொல்வது எளிது: முதல்வர் ஜெயலலிதா ஆளும் கட்சியாக இருக்கும்போது, எதிர்க் கட்சிக்கு உரிய இலக்கணத் தைச் சொல்வது. செய்வது அரிது: இதே முதல்வர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போது செயல்பட்ட விதம்.''

- டி.என்.போஜன், ஊட்டி.

''நாட்டில் எந்த ஊழல் நடந்தாலும் தனக்குத் 'தெரியாது’ என்று சொல்லும் மன்மோகன் சிங்கின் மத்திய அரசு, 'பெட்ரோல் விலை உயர்வுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறதே?''

''அந்தக் குழந்தையே நீங்கதானா சார்?''

- ஆர்.விஜி, திருத்தணி.

நானே கேள்வி... நானே பதில்!

''பெரியார் என்றால் என்ன பொருள்?''

''சென்னை சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் இருந்தார். அவர் பெரியாரின் சீடர். ஒருசமயம் சட்டமன்றத்தில், காங்கிரஸ்காரர் ஒருவர் ஏ.டி.பி-யிடம் 'பெரியார் என்ற பெயருக்குப் பொருள் என்ன?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு, 'மகாத்மா என்ற சொல்லுக்கு என்ன பொருளோ, அதுதான் பெரியார் என்ற சொல்லுக்கும் பொருளாகும்’ என்றார் ஏ.டி.பி.''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''தமிழ் மொழிக்கே உரிய தனிப் பெருமையை மற்ற தொன்மையான மொழிகளோடு ஒப்பிட்டுக் கூற முடியுமா?''

''அமெரிக்காவின் மிகப் பெரிய எம்பயர் ஸ்டேட் கட்டடம்போல 30 மடங்கு பெரிதான பிரமிடுகளைக் கட்டிய எகிப்தி யர்கள் பேசிய எகிப்திய மொழி இப்போது இல்லை.

'இந்த உலகத்தையே தன் காலடியில் விழவைப்பேன்’ என்று சொன்ன மாவீரன் அலெக்சாண்டர் பேசிய ஆதி கிரேக்க மொழி இப்போது இல்லை. ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர் பேசிய பாலி மொழி இப்போது இல்லை. அன்பிற்கரசர் இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழியின் கிளை மொழியான அரமிக் இல்லை.

ஆனால், இத்தனை மொழிகளோடு பிறந்து, வளர்ந்து தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்தபோதிலும் இன்றைக்கும் வாழ்ந்து, வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழியாம் நம் தமிழ் மொழிதான்.''

- க.அருள், ஆரணி.

நானே கேள்வி... நானே பதில்!