Published:Updated:

தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லையா?

விகடன் விமர்சனக்குழு
தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லையா?
தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லையா?
தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லையா?

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா,  இந்திய கடல்பகுதியில் குஜராத் மீனவர்கள் மீது சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டிய அக்கறையை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, காட்ட தவறியுள்ளது என்றும், இது ஒருதலைப்பட்சமாகவும், மாற்றான்தாய் மனப்பான்மையுடனும் மத்திய அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனோ, தமிழக மீனவர்கள், குஜராத் மீனவர்கள் என்று மத்திய அரசு யாரையும் பாகுபாடு பார்க்க வில்லை என்று கூறியுள்ளார்.

##~~##
தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லையா...? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?