Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

அன்புள்ள ஆசிரியருக்கு...

நானே கேள்வி... நானே பதில்!

அன்புள்ள ஆசிரியருக்கு...

Published:Updated:

''இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பாடங்கள் தவிர்த்து ஆசிரியர்கள் வேறு எதாவது கற்பிக்க வேண்டும் என விரும்புகிறார்களா?''

 '

நானே கேள்வி... நானே பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இன்றைய பெற்றோர் விரும்புகிறார்களோ இல்லையோ, ஒரு பிரபலமான அப்பா தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய இந்தக் கடிதத்தின் சுருக்கத்தைப் படித்துப் பாருங்கள்...  

'உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர், உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரைவிட மதிப்பானது என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தையும் எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதையும் புரியவையுங்கள்.

புத்தகம் என்னும் அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிடத் தோல்வி அடைவது மேலென்று புரியவையுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும் முரடர் களிடம் கடினமாகவும் அணுகுவதற்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாகக் கரைந்துவிடாமல் எந்தச் சூழலிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங் கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர்விடுவதில் தவறு இல்லை என்றும் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன் மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் நம்பிக்கை கொள்வான்.

இவற்றில் உமக்கு எவை எல்லாம் சாத்தியமோ அவற்றை எல்லாம் அவனுக் குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்!’ என்று முடிக்கிறார்.

அந்தப் பிரபலம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன்!''

- டி.புதுராஜா, சென்னை.

##~##

''இந்தியாவில் பணக்காரர்கள் வைத்ததுதான் சட்டமா?''

''அதில் என்ன சந்தேகம். ஆடம்பரப் பொருட்களுக்கு வரியைக் குறைக்கும் அரசு, அத்தியாவசியப் பொருட்களுக்கு வரியைக் கூட்டுகிறது. வறுமைக்கோட்டுக் குக் கீழே இருப்பவர்கள் நடுத்தர வர்க் கத்துக்கும் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர் கள் மேல் தட்டுக்கும் வரவிடாமல் கவன மாகப் பார்த்துக்கொள்வது... பணக்காரர் களின் தொழிற்சாலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற் காகத்தானே. விலைவாசி தாறுமாறாக ஏறுவதைத் தடுக்காத அரசு, அதற்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் தொழிலாளிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுப்பது இல்லை.''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''நம் அன்றாடச் செயல்கள் எல்லாவற்றிலும் அறிவியல் இருக்கிறதா?''

''சின்ன வகுப்புகளில் படித்த ஒரு பழைய கதை. ஒரு காகம் தண்ணீர் தாகத்துடன் பறந்து வர... ஒரு தோட்டத்தில், ஒரு பெரிய குடுவை போன்ற குவளையில், கீழே எட்டாத ஆழத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டது. பின் அருகில் கிடந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி அந்தக் குடுவையினுள் காகம் போட, தண்ணீர் மேலெழுந்து வந்தது. பின் தண்ணீரைப் பருகிய காகம், தாகம் நீங்கி மகிழ்ச்சியாகப் பறந்ததாம். கதையில் உள்ள நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. ஆனால், எந்த காக்காவுக்கும் தெரியாது ஆர்க்கிமிடீஸின் தத்துவம்.''

- விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

''மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தமிழக அதிகாரிகள் எந்த அளவு அக்கறை காட்டுகிறார்கள்?

''சமீபத்தில் சுகாதாரத் துறை அதிகாரி களால் வெளியிடப்பட்ட ஒரு செய்தியே இதற்குப் பதில் சொல்கிறது: 'நெல்லையில் டெங்குக் காய்ச்சலால் 28 பேர் மட்டுமே உயிரிழப்பு’. அதாவது, கூடுதலான எண்ணிக்கையினர் உயிரிழந்தனர் என்ற தகவலை மறுப்பதற்காக டெங்குக் காய்ச்சலால் இறந்தோர் என்று 28 பேர் பெயர்களையும், மற்ற நோய்களால் இறந்தவர்கள் என்று 16 பேர் பெயர்களையும் வயது உட்படத் துல்லியமான புள்ளிவிவரமாக வெளியிடு வதில்தான் சுகாதாரத் துறை மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு இருக்கிறது. இந்தச் செய்தி இப்படி அல்லவா வந்திருக்க வேண்டும்? 'நெல்லையில் மட்டுமே 28 பேர் டெங்குக் காய்ச்சலால் உயிர் இழப்பு!’  

'நமது மாவட்டத்தில் மட்டுமே 28 பேர் பலியா?’ என்று நெல்லை சுகாதாரத் துறை அதிகாரிகளும் 'மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் மட்டுமே இத்தனை பேர் பலியா?’ என்று மாநில சுகாதாரத் துறையும் துரிதமாகவும் திறமையாகவும் செயல்படுவது தானே மக்கள் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டும்!''

- அன்புமணி, ஈரோடு.

''இடியாப்பச் சிக்கல் என்கிறார்களே... அது என்னவென்று சொல்ல முடியுமா?''

''தி.மு.க-வும் காங்கிரஸும் இடியாப்பச் சிக்கல் மாதிரிதான் மாட்டிக்கொண்டு விழிக்கின்றன. தி.மு.க-வை எப்படி உதறுவது என்று காங்கிரஸுக்குத் தெரியவில்லை. காங்கிரஸிடம் இருந்து என்ன காரணம் சொல்லிப் பிரிவது என்று தி.மு.க-வுக்குத் தெரியவில்லை. இதுதாங்க இடியாப்பச் சிக்கல்!''

- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

''மனிதர்களை மற்ற உயிரினங்களுடன் ஒப்பிட முடியாதுதானே?''

''ஏன் முடியாது? இன்று மனிதனும் அமீபாவும் 'ஒரு செல்’ பிராணிகள்தானே!''

- ஜி.விஜயன், திருவாரூர்.

நானே கேள்வி... நானே பதில்!

''நமது இந்நாள் முதல்வராகட்டும், முன்னாள் முதல்வராகட்டும்... எந்தப் பிரச்னை என்றாலும் பிரதமருக்குக் கடிதம் எழுதுவது நியாயம் தானா?''

''உங்களுக்குத் தெரியுமா... பெட்ரோல் மீதான வரியைக் குறைக்கச் சொல்லி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதப்போகிறாராம்!''

- புதூர் பாலா, நாமக்கல்.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism