Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

என்னைப் பார்... என் அழகைப் பார்!

நானே கேள்வி... நானே பதில்!

என்னைப் பார்... என் அழகைப் பார்!

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!

''காதல் பாடல், அயிட்டம் பாடல்... என்ன வேற்றுமை?''

''காதல் பாடலில் ஆண் பெண்ணை வர்ணிப்பான். அயிட்டம் பாடலில் பெண் தன்னையே வர்ணிப்பாள்!''

- அ.ரியாஸ், சேலம்.

நானே கேள்வி... நானே பதில்!

''ஜெயகாந்தன் தடாலடி எழுத்தாளராமே?''

''ஜெயகாந்தன் தான் ஆசிரிய ராக இருந்து நடத்திய கல்பனா மாத இதழில் வாசகர்களின் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். 'இலக்கிய முரடனாமே நீங்கள்?’ என்று ஒரு வாசகி அதில் கேட்டிருந்த கேள்விக்கு, ஜெயகாந்தன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

'எவன்ன்ன் சொன்னான்?’ ''

- உ.ராஜாஜி, இடைக்காட்டூர்.

''மொழியானது ஒரு வியாபாரத்துக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்ல முடியுமா?''

''கோவை - சிங்காநல்லூருக்கு அருகே இருக்கிற மாநில அரசினுடைய இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி கட்டத் தொடங்கி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது.

அஸ்திவாரத்தில் இருந்து எல்லா வேலைகளுக்குமே வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதுவரை அருகில் இருந்த மதுக் கடையின், அதாங்க 'டாஸ்மாக்’கின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் பெயர் எழுதப்பட்டு இருந்தது. இப்போது வெளி மாநிலத் தொழிலாளர்களையும் குடிகாரர்களாக்க இந்தியும் பெயர்ப் பலகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்ப சொல்லுங்க, மொழி முக்கியம்தானே வியாபாரத்துக்கு?''

- அல்லிராஜ், கோவை.

##~##

''நம் நாட்டில் நீதித் துறை எப்படி இருக்கிறது?''

''படு ஸ்டிராங்காக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 50 ரூபாய் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட நரேந்திர திரிவேதி, ஹரிபாய்சவுகான் ஆகிய இருவருக்கும் குஜராத் நீதிமன்றம் இப்போது ஆறு மாதம் சிறைத் தண்டனையை அறிவித்து இருக்கிறது. தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இருவரும் மனு செய்ய, தொகை சிறியது என்பதற்காக ஊழல் விஷயத்தில் கருணை காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் எல்லாம் வெளியே உலவிக்கொண்டு இருக்கிறார்களே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.''

- ஜெ.கண்ணன், சென்னை.

'' 'இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி’. இனி, நாடு சுபிட்சம் அடைந்துவிடுமா?''

''நாடு சுபிட்சம் அடை கிறதோ இல்லையோ... ராகு லுக்கு இனி கட்சியில் ரூட் கிளியர். அது போதாதா கதர் தொண்டர்களுக்கு!''

- கு.மணி, செங்கல்பட்டு.

''திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு... இப்படி எல்லா ஊர்களுக்கும் டூர் போனால் ஏதாவது வாங்கி வருவதுபோல நிலவுக்குப் போனால் என்ன வாங்கி வரலாம்?''

''வேறென்ன? பாட்டி சுட்ட வடைதான்.''

- நா.அருள்ஜோதியன், கவுண்டன்பாளையம்.

''உலகில் யாரைக் காட்டிலும் இந்தியர்கள் திறமைசாலிகள்தான். ஆனாலும், ஏன் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை நம்மவர்கள் பெறத் தவறுகிறார்கள்?''

''ஒரே ஒரு சின்ன சாம்பிள்... ஒரு போட்டி முடிந்தவுடன் ஜெயித்தவரும் தோற்றவரும் கை குலுக்கி வாழ்த்து தெரி வித்துக்கொள்ளும் மாண்பு விளையாட்டில் மட்டுமே உண்டு. ஆனால், ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக இரட்டையர் டென்னிஸில் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதியை இணை சேர்ந்து ஆடவைப்பதற்கே மல்லுக்கட்ட வேண்டிஇருக்கிறது. லியாண்டருடன் விளையாடச் சொன்னதற்கு, 'அவருடைய முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை’ என்றெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து இருக்கிறார் மகேஷ் பூபதி. உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறதா?''

- ஜே.அபி, மும்பை.

''சமீபத்தில் வாசித்து ரசித்தது...?''

''தனது ஆஸ்பத்திரி அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க... 'துக்ளக்’கில் சோ எழுதிய கட்டுரையைப் படித்தபோது! மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு நாளும் 'உபதேச மழையில்’ நனைந்ததைச் சுவாரஸ்யமாக நக்கலும் நையாண்டியுமாக விவரித்து இருக்கிறார் சோ. அதில் ஒரு பெண்ணிடம் அடிபட்ட அனுபவத்தையும் இப்படிச் சொல்லியிருக்கிறார்...

'நெஞ்சில் கபம் இருந்ததால், அதை எடுக்க பிசியோதெர பிஸ்ட்டுகள் என்னை மார்பில் அடித்தார்கள். 'பட் பட் பட்’ என்று நல்ல அடி. ஆண்கள் செய்கிற வரையில் இது சரியாகப் போயிற்று. ஒரு பெண் வந்து நன்றாக அடித்தார். அவர் அடித்து முடித்த பிறகு, அவரிடம் 'அம்மா, உனக்கு ஒரு வேண்டுகோள்’ என்றேன்.

'என்ன சார்?’ என்று அவர் கேட்டார்.

'என்னை அடித்ததை வெளியே சொல்லிவிடாதீர்கள். பொம்பளையிடம் அடிபட்டவன் என்ற பெயர் வரும். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். அந்த அம்மையார் பெருந்தன்மையுடன், 'நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்ததாக வந்த ஆள், 'அந்த அம்மா வந்து உங்களை மார்லே பட் பட் பட்டுனு நல்லா அடிச்சுட்டாங்களாமே!’ என்று கேட்டார்.

நானே கேள்வி... நானே பதில்!

'யார் உங்களுக்குச் சொன்னது?’ என்றேன்.

'அவங்கதான் சொன்னாங்க’ என்றார்.’

ஆங்... இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்!''

- ம.சங்கர், மதுரவாயல்.

''தன்னம்பிக்கை... அதீத தன்னம்பிக்கை... என்ன வித்தியாசம்?''

''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைத்ததற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'எங்கள் கட்சி முன்னேற்றப் பாதையில் செல்கிறது’ என்று சொல்வது தன்னம்பிக்கை. அதே இடைத்தேர்தல் வெற்றிக்கு, 'அ.தி.மு.க-வின் ஓராண்டு சாதனைக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த நற்சான்று’ என்பது ஜெயலலிதாவின் அதீத தன்னம்பிக்கை!''

- க.வேலு, ஆரணி.

நானே கேள்வி... நானே பதில்!