Published:Updated:

வாலை நீட்டி, வேலையைக் காட்டும் வால்மார்ட்!

வாலை நீட்டி, வேலையைக் காட்டும் வால்மார்ட்!
வாலை நீட்டி, வேலையைக் காட்டும் வால்மார்ட்!
வாலை நீட்டி, வேலையைக் காட்டும் வால்மார்ட்!

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட், பல்பொருள் சில்லரை வியாபாரத்தில் மிக பெரிய நிறுவனம். உலகின் பல நாடுகளில் கடைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவிலும் சில்லரை வர்த்தகத்தில் கால் பதிக்க திட்டமிட்டு கடந்த 2008-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க எம்.பி.க்களிடையே ஆதரவு திரட்டி வருகிறது. தங்களது வர்த்தகத்துக்காக ஆதரவு திரட்டுவது, அமெரிக்காவில் சட்டரீதியான வழிமுறை.

அதே சமயத்தில், ஆதரவு திரட்டியது பற்றி 3 மாதங்களுக்கு ஒருமுறை அமெரிக்க நாடா£ளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஆதரவு திரட்டிய வகையில், ரூ.242 கோடி செலவழித்ததாக வால்மார்ட் கடந்த ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, இந்தியாவிலும் கடும் புயலைக் கிளப்பியது. இதுபற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், ஆதரவு திரட்டும் வேலையை வால்மார்ட் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. ஆனால், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில், ஆதரவு திரட்டும் வேலையை வால்மார்ட் மீண்டும் தொடங்கி உள்ளது. அமெரிக்க செனட்டில் வால்மார்ட் தாக்கல் செய்த 19 பக்க அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

##~~##
அதில், இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் கால் பதிப்பது உள்ளிட்ட 50 விஷயங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, மேற்கண்ட 3 மாதங்களில் 15 லட்சம் டாலர்கள் (ரூ.9 கோடியே 30 லட்சம்) செலவழித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம், தொழிலாளர் துறை உள்ளிட்டவற்றில் ஆதரவு திரட்டுவதற்காக வால்மார்ட் இந்த பணத்தை செலவிட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், இந்தியாவிலும் தீவிர பேச்சுவார்த்தைகளில் வால்மார்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும், சில்லரை வர்த்தகத்துக்கான விதிமுறைகளை தளர்த்துமாறு, இந்திய அரசை வற்புறுத்தி வருகிறது. இந்தியாவில் மொத்த சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பார்தி நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இம்மாத தொடக்கத்தில் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.