Published:Updated:

காவலிலிருந்து தப்பி ஓடிய பீகார் குண்டுவெடிப்பு குற்றவாளி பிடிபட்டார்!

காவலிலிருந்து தப்பி ஓடிய பீகார் குண்டுவெடிப்பு குற்றவாளி பிடிபட்டார்!
காவலிலிருந்து தப்பி ஓடிய பீகார் குண்டுவெடிப்பு குற்றவாளி பிடிபட்டார்!
காவலிலிருந்து தப்பி ஓடிய பீகார் குண்டுவெடிப்பு குற்றவாளி பிடிபட்டார்!

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக குற்றவாளியாக கைதுசெய்யப்பட்ட மெஹர் ஆலம் என்பவர் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் காவலிலிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் கான்பூரில் பிடித்துள்ளனர்.

முஷாஃபர்பூர் ரயில் நிலையம் அருகே வைத்து மெஹர் ஆலமிடம் விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தம்மை கழிப்பறை செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.

அதிகாரிகளும் அனுமதித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆலம் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஆலமை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில், அவரை கான்பூரில் போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.  

'குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ. நிதியுதவி'

இதனிடையே  பாட்னா  குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்னாவில் கடந்த 27 ஆம் தேதியன்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் வருவதற்கு முன்னர் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் 6 பேர் பலியாகினர்; 80 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு துறையினர் தெரிவித்திருந்தனர்.

##~~##
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான நிதியுதவியை இந்திய முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரியாஸ் பகத்கல் என்பவருக்கு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. அளித்ததாகவும், ரியாஸ் அந்த பணத்தை, பாட்னா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தெஹ்ஸீன் அக்தரிடம் வழங்கியதாகவும், அவர் அதனை ஹைதர் என்பவரிடம் கொடுத்ததாகவும், பின்னர் ஹைதர் மூலமாக பாட்னா காந்திநகர் மைதானத்தில் குண்டுவைத்த 6 தீவிரவாதிகளுக்கு அப்பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.