Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ரத்தத்தின் ரத்தமே!

நானே கேள்வி... நானே பதில்!

ரத்தத்தின் ரத்தமே!

Published:Updated:
##~##

''அ.தி.மு.க. தொண்டனுக்கும் தி.மு.க. தொண்டனுக்கும் என்ன வித்தியாசம்?''

 ''பெங்களூரில் இருந்து வருபவர்களை வரவேற்றால், அ.தி.மு.க தொண்டன். திகாரில் இருந்து வருபவர்களை வரவேற்றால், தி.மு.க. தொண்டன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

''விரக்தி எப்போது வெறுப்பாக வெடிக்கும்?''

''இத்தனை கையாலாகாதவர்கள் மத்தியிலா நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கும்போது. ஹரியானா மாநிலம், மானேசர் அருகில் உள்ள கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுக் குழந்தை மஹி கிட்டத்தட்ட மூன்றரை நாள் போராட்டத்துக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்டு இருக்கிறாள். 'மஹியின் குடும்பத்தாருக்கு அவளுடைய இழப்பை முழுமையாக ஈடுசெய்வதோடு, ஆழ்துளைக் கிணற்றை மூடாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்து

நானே கேள்வி... நானே பதில்!

இருக்கிறது அரசாங்கம். ஆனால், நிஜம் என்ன தெரியுமா? கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மஹி, அதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்னரே உயிரை விட்டு இருக்கிறாள். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதே, மஹியின் சடலம் சிதைந்து துர்நாற்றம் அடித்து இருக்கிறதாம். கிணற்றுக்குள்ளேயே மஹி இறந்துவிட்டாள் என்பது மீட்புக் குழுவினருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும், சுற்றி நின்ற மக்களை நம்பவைக்க இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். சிறுமி மஹி கிணற்றுக்குள் விழுந்ததிலும் பல மணி நேரங்கள் தாமதமான மீட்பு நடவடிக்கை காரணமாக இறந்ததிலும் அரசாங்கத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது. முதல்வர்கள், அமைச்சர்கள் வசிக்கும் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக்கூட வைக்க முன்வராத அரசு இயந்திரங்கள், சாமானியர்கள் நடமாடும் இடங்களில் சவக் குழிகளைத் திறக்க மட்டும் தயங்குவதே இல்லை!''

- சி.மலரவன், தேனி

நானே கேள்வி... நானே பதில்!

''எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எதுவரை படித்திருக்கிறார்?''

''தன் நூலின் முன்னுரை ஒன்றில் கி.ரா. இதுபற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.

'மழைக்காகப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியவன் நான். அப்போதும்கூட பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழை யையே பார்த்துக்கொண்டு  இருந்துவிட்டேன்!’ ''

- உ.ராஜாஜி, இடைக்காட்டூர்

''சென்னையில் நீங்கள் விரும்பி நிறைவேறாத ஆசை எது?''

''ஸ்ட்ரா போடாமல் இளநீர் குடிக்கும் ஆசை!''

- மதிபாரதி, சென்னை-91.

''ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி. கார்டு, பான் கார்டு இதில் எது இன்று மிகமிக முக்கியமானது?''

''இது மூன்றும் இல்லை. நாலாவதாக ஒன்று உள்ளது. அது... சிம் கார்டு!''

- சாய்மீரா, மயிலாடுதுறை.

''பெரியாரைத் தாக்கி சீமானும் அவர் சார்ந்த இயக்கத்தினரும் பேசிவருகின்றனரே?''

'' 'கண்ணீர்த் துளிகள்’ என்று சொல்லி பெரியாரை விமர்சித்துப் பிரிந்த 'அண்ணா’வாலேயே பெரியாரை உச்சரிக்காமல் அரசியல் செய்ய முடியவில்லை. இவர்கள் 'தம்பி’கள்!''

     - தெ.சு.கவுதமன், சென்னை-52

'' 'என் ரத்தத்தின் ரத்தமே’ என்கிற புகழ்பெற்ற வரியை எம்.ஜி.ஆர். எதற்காகச் சொன்னார்?''

நானே கேள்வி... நானே பதில்!

''எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, குண்டு அடிபட்ட எம்.ஜி.ஆர். குற்றுயிராகப் படுக்கை யில் உயிருக்காகப் போராடினார். அவர்பால் அளப்பரிய பாசம்கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் கொடுக்கத் தங்கள் பெயரைப் பதிவுசெய்தார்கள். ஆனாலும், அவருக்குப் பொருந்திய சிலரின் ரத்தம் ஏற்கப்பட்டது. தனக்குப் புத்துயிர் தந்த தொண்டர்களை மேடைதோறும் தவறாமல் பேச்சின் துவக்கத்திலேயே அப்படி அழைப்பார். கரவொலி விண்ணைப் பிளக்கும்!''

'' 'கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்’ பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா..?''

'' 'தமிழக அரசின் சார்பில் எம்.எல். ஏ-க்களுக்கு லேப்-டாப்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான எம்.எல்.ஏ-க் களுக்கு அதைப் பயன்படுத்தத் தெரியாமல், புதுப் பட சி.டி-க்களை வாங்கிப் படம் பார்க்கிறார்கள்’ என்று செய்தி படித்தேன். இப்போது மீண்டும் ஒரு முறை கேள்வியை வாசியுங்கள்!''

- ஆர்.கே.சுந்தரம், வடபழனி.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism