Published:Updated:

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

Published:Updated:

சுமார் 90 அடி உயரம் உள்ள அந்தத் தென்னை மரத்தின் மீது கை, கால்களைப் பின்னிப் பிணைத்தபடி ஊர்ந்து ஏறுகிறார் ஆறுமுகம். 60 வயதான ஆறுமுகத்துக்குத்  தென்னை மற்றும் பனை மரம் ஏறுவதுதான் தொழில். மரம் ஏறுவதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

    ஒரு காலத்தில் மரம் ஏறுவதற்கு என்றே ஒவ்வொரு கிராமத்திலும் கணிசமான தொழிலாளர்கள் இருந்தார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தினர் தென்னை, பனை மரங்களில் ஏறித் தேங்காய்களையும் பனம் நுங்குகளையும்  பறித்துத் தருவார்கள். அதற்கானக் கூலியாக பணம் பெற்றுக் கொள்வார்கள். பழமையான எல்லாத் தொழில்களும் அழிந்துவருவது போலவே இன்று மரம் ஏறுவதற்கான ஆட்களும் அரிதாகிவிட்டார்கள்.

இப்போது  கொங்கு மண்டலத்தில்  தென்னந்தோப்புகளில் மரம் ஏறும் சாதனத்தை வைத்துத் தேங்காய் பறிக்கிறார்கள். அல்லது நீளமான கம்பில் குறுவாள் ஒன்றினைப் பொருத்திக்கொண்டு தேங்காய் பறிக்கிறார்கள். அதோடு வேலை முடிந்துவிடுகிறது. மரம் ஏறுபவர்களின் தொழில் தென்னை மரம், பனை மரம் ஏறி தேங்காயையும் நுங்குகளையும் பறிப்பது மட்டும் அல்ல; மரத்தின் பராமரிப்பையும் மேற்கொள்வார்கள். அரிதாகிவரும் மனிதர்களில் எஞ்சி இருக்கிற நபர்களில் ஒருவர்தான் ஆறுமுகம். கோவை, செட்டிப்பாளையத்தில் வசித்துவருபவர். அவரிடம் பேசினேன்.

''இன்னைக்குக் கோவை மாவட்டத்துல மரம் ஏற ஆள் வேணும்னா செட்டிப்பாளையத்துக்குதான் வருவாங்க. மூணு தலைமுறையா மரம் ஏறுகிற தொழில் செய்றவங்க வசிக்கிறவங்க ஊர் இது. என் தாத்தாவும், அப்பாவும், நானும் ஒண்ணா மரம் ஏறி இருக்கோம். அப்ப எனக்கு நாலு வயசு இருக்கும்.  ஊர்ல ஆம்பிளைப் பிள்ளைக்கு மரம் ஏறத் தெரியலைன்னா அது பெரிய கௌரவக் குறைச்சல். மரம் ஏற வக்கில்லாதவனுக்குச் சோறு போடாதேனு அப்பச்சிங்க வெளியே துரத்தி விட்டுடுவாங்க.

ஊர் முழுக்க எங்க பார்த்தாலும் பச்சைப் பசேல்னு தென்னந் தோப்புகள் நிறைஞ்சு இருக்கும். மரத்துக்கு அடியிலதான் குடிசைகள் போட்டு இருந்தோம்.

எங்க அப்பா, ஜி.டி.நாயுடு தோட்டத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். நான் சின்ன வயசுல அந்தத் தோட்டத்துலதான் சுத்திக்கிட்டு இருப்பேன். அப்பா மரம் ஏறித் தேங்காய் பறிச்சுப் போட நான் பொறுக்கிச் சேகரிச்சு வைக்கோணும். அப்பா கீழே இறங்கியதும் ரெண்டு பேரும் சேர்ந்து தேங்காய்களை உரிப்போம்.

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

எங்க அப்பா காலத்துக்கு அப்புறம் நானும் இந்தத் தொழிலையே செய்ய ஆரம்பிச்சேன். எங்க கிராமத்து ஆளுங்க எல்லாம் இந்தக் கோவை மாவட்டத்துல கால்வைக்காத தென்னந்தோப்பே இல்லை. கேரளாவுல மரம் ஏற ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டப்ப,  அங்கேயும் போய் மரம் ஏறினோம். ஆனா, வருஷத்துல ஆறு மாசம்தான் தேங்காய் காய்க்கும். மீதி ஆறு மாசம் சும்மாதான் இருக்கணும். வருஷத்துல பாதி நாள் சோறு போடாத இந்தத் தொழிலை எப்படி நம்பி வாழுறது? பல பேரு வெவ்வேற வேலைக்குப் போய்ட்டாங்க. இன்னைக்கு என்னைப் போல ஒருத்தர் ரெண்டு பேர்தான் இந்தத் தொழில்ல மிச்சம் இருக்கோம். இது லேசுப்பட்ட தொழில் இல்லைங்க. என் கண் முன்னாடி என் பங்காளிங்க பலர் மரத்துல இருந்து கீழே விழுந்து உயிரை விட்டுருக்காங்க.  மரம் ஏறுறப்ப கருந்தேள் கொட்டி, காட்டு வண்டு கடிச்சுப் பல பேரு செத்துப் போயிருக்காங்க. நான்கூட ரெண்டு, மூணு தடவை கீழே விழுந்து இருக்கேன்.  அம்பது தடவையாவது  தேள் கொட்டி இருக்கும். தென்னம்மா புண்ணியத்துல என் உசுருக்கு எந்த  பாதிப்பும் இல்லை.

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

கரணம் தப்பினா மரணம்கிறதால எங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க.  எனக்கே ஏகப்பட்ட தள்ளுமுள்ளுக்கு அப்புறம்தான் கல்யாணம் நடந்துச்சு. என்னோட நண்பர்கள்  என்னை வேற தொழிலுக்குக் கூப்பிட்டாங்க. எனக்கு என்னமோ தென்னம்மாவைவிட்டுப் பிரியத் தோணலைங்க. சாகும்போதும் இந்த மரத்தைக் கட்டிப் பிடிச்சிகிட்டுத்தான் சாகணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா, தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!'

”தென்னம்மா என்னோட இன்னொரு அம்மா!”

கட்டுரை, படங்கள்: ம.முரளிதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism