Published:Updated:

பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ: 7 பேர் பலி

விகடன் விமர்சனக்குழு
பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ: 7 பேர் பலி
பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ: 7 பேர் பலி

ஹவேரி: பெங்களூருவில் சொகுசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பயணிகள் உடல் கருகி பலியானார்கள். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ: 7 பேர் பலி

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு சொகுசு பேருந்து ஒன்று 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோர தடுப்பில் பேருந்து மோதியதில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள்.  மேலும், 40 பேர் காயமடைந்தனர்.

##~~##
அவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் ஹுப்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி 45 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.