பிரீமியம் ஸ்டோரி
அம்மாடி சைக்கிள்!

சத்தல் வசதிகளுடன் கார்களைத் தயாரித்து விற்கும் ஆடி நிறு வனம், இப்போது சைக்கிள் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ஆஸ்திரியா கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த சைக்கிள், பார்த்த உடனேயே ஆளை அசத்துகிறது. பார்க்க ஸ்போர்ட்ஸ் சைக்கிள்போல இருந்தாலும், இதன் வசதிகள்இந்தி யாவின் பல பைக்குகளில்கூடக் கிடையாது. சைக்கிள் என்று சொன்னாலும், இது ஒரு இ-பைக்! 'ஸ்போர்ட்ஸ் மெஷின்’ என்கிறார்கள் ஆடி ஆட்கள். அதாவது, இதில் ரிலாக்ஸ்டாக சைக்கிள் ஓட்டலாம், விறுவிறு ரேஸில் கலந்துகொள்ளலாம், அதிரடி ஸ்டன்ட்களில் ஈடுபடலாம். மிகக் குறைந்த புவியீர்ப்பு விசை மட்டுமே இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட இந்த சைக்கிள், பேட்டரியின்

அம்மாடி சைக்கிள்!

சக்தி அல்லது மனித உழைப்பு... என இரண்டு வகையிலும் இயங்கும். மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை செல்லும் இந்த சைக்கிளின் இயக்கத்தை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் தீர்மானிக்கலாம். சைக்கிளைப் பூட்டுவது, பூட்டைத் திறப்பது, இயக்கத்தின் இயல்பைத் தீர்மானிப்பது, இருக்கையின் உயரத்தை ஏற்றி, இறக்குவது என எல்லாமே ஸ்மார்ட் போன் மூலம் முடிக்கலாம். நீங்கள் இந்த சைக்கிளின் மூலம் செய்யும் ஸ்டன்ட் வித்தைகளை அப்போதே உடனடியாக இணையத்தில் பதிவேற்றலாம். மிக சமீபத் தில்தான் உலகின் பிரபல பைக் நிறுவன மான டுகாட்டியை வாங்கியிருக்கிறது ஆடி. அந்த ஜோரில் இந்த இ-பைக்கை காட்சிக்கு வைத்திருப்பதால், இரு சக்கர வாகனச் சந்தையில் ஆடியின் முத்திரை அழுத்த மாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த சைக்கிளை இப்போதே வாங்க ஆசை யாக இருக்கிறதா? ஆனால், 'இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை. ஜஸ்ட் ஷோ பைக்தான்’ என்கிறது ஆடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு