Published:Updated:

அச்சுதானந்தன் மீது வழக்கு தொடர சரிதா நாயகர் முடிவு!

விகடன் விமர்சனக்குழு
அச்சுதானந்தன் மீது வழக்கு தொடர சரிதா நாயகர் முடிவு!
அச்சுதானந்தன் மீது வழக்கு தொடர சரிதா நாயகர் முடிவு!
அச்சுதானந்தன் மீது வழக்கு தொடர சரிதா நாயகர் முடிவு!

திருவனந்தபுரம்: என்னைக் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் மீது வழக்கு தொடரப்போவதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாக கூறி கேரளாவில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக் கொண்டு இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

##~~##
இந்நிலையில், சரிதா நாயருடன் கேரள மத்திய அமைச்சர் உள்பட சில அரசியல்வாதிகள் உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததாகவும், அது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் அறிவித்தார். பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் ஜேக்கப் மாத்யூசுவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சிறையில் உள்ள சரிதா நாயரை அவரது வழக்கறிஞர் பெனி பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர், நிருபர்களிடம் கூறும்போது, ''பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் எனது கட்சிக்காரர் சரிதா நாயர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
அதை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்கு தொடரவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் எனது கட்சிக்காரர் சரிதாநாயர் முடிவு செய்துள்ளார்'' என்றார்.