Published:Updated:

80-20 அழகி சீக்ரெட்!

க.நாகப்பன்படங்கள் : ந.வசந்தகுமார்

80-20 அழகி சீக்ரெட்!

க.நாகப்பன்படங்கள் : ந.வசந்தகுமார்

Published:Updated:
##~##

''காருக்கு பெட்ரோல் போடுறப்ப, பங்க்ல இருந்த ஒரு அம்மா, 'நீங்க படற கஷ்டங்களைப் பார்த்த பிறகு, நான் அழறதையே நிறுத்திட்டேன். நானும் கண்டிப்பா ஜெயிப்பேன் மேடம். நீங்கதான் எனக்கு ரோல் மாடல்’னு சொன்னாங்க. சரவணா ஸ்டோர்ஸ் போயிருந்தப்போ சேல்ஸ் கேர்ள் பொண்ணுங்கள்ல ஆரம்பிச்சு வாடிக்கையாளர் வரை எல்லாரும் சுத்தி நின்னு கைகுலுக்கிப் பாராட்டி கதை கதையாப் பேசுறாங்க. தியேட்டர்ல படம் பார்க்கப்போனா ஒரு பொண்ணு, 'உங்ககிட்ட ஒண்ணு கத்துக்கிட்டேன் மேடம். அது பொறுமை. பொறுமையா இருந்தா நிறைய நல்லது நடக்குது மேடம்’னு கண் கலங்கிச் சொல்லிட்டுப் போறாங்க!''- நெகிழ்வும் மகிழ்வும் ததும்புகிறது விஜி சந்திரசேகரின் குரலில்.

 'அழகி’ சுந்தரிதான் இப்போ மெகா சீரியல் சூப்பர் ஸ்டார். 'தில்லுமுல்லு’ படத்தில் ரஜினியின் தங்கையாக காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்தவர். நடிகை சரிதாவின் உடன்பிறந்த சகோதரி. நித்தமொரு சவாலைச் சமாளிக்கும் 'சுந்தரி’க்குத் தோள் கொடுக்க இரவு பதினோரு மணி வரை விழித்திருக்கக்கூட அசருவதில்லை தமிழக இல்லத்தரசிகள். ''சுந்தரி கேரக்டருக்கு இருக்கும் மரியாதை யைக் கெடுத்துரக் கூடாதேனு இப்போலாம் நான் வெளியே போறப்ப மாடர்ன் டிரெஸ்ஸைத் தவிர்த்துட்டு, சேலை கட்டிட்டு போறேன். 'சுந்தரி’க்குக் கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும் 'அழகி’ டீமுக்குச் சேரும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

80-20 அழகி சீக்ரெட்!

''சினிமா டு சீரியல்... ஹிஸ்ட்ரி, ஜியாக்கரஃபி சொல்லுங்க?''

''20 வருஷங்களுக்கு முன்னாடி அக்கா நடிச்ச 'அக்னி சாட்சி’ பட ஷூட்டிங்குக்கு நானும் போயிருந்தேன். அங்கே துறுதுறுனு அமர்க்களம் பண்ணிட்டே இருந்த என்னை பாலசந்தர் சார் பார்த்துட்டே இருந்தாரு. அப்போ 'விஜிக்கு ஸ்கேட்டிங்கூடத் தெரியும்’னு அக்கா சொன்னதும் ரஜினிக்குத் தங்கச்சியா 'தில்லுமுல்லு’ படத்துல நடிக்கவெச்சிட்டார். ஆனா, 'படிச்சது வக்கீலுக்கு... நடிக்கப்போறியா? உன்னை நான் ஜட்ஜ் ஆக்கிப் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்’னு அப்பா சொன்னாரு. வீட்டுக்கு ஒரு நடிகை போதுமேனு நான் நியூயார்க்குக்குச் சட்டம் படிக்கப் போயிட்டேன். அப்பா

80-20 அழகி சீக்ரெட்!

இறந்ததும் அக்கா, என்னைக் குடும்ப நண்பர் சந்திரசேகருக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க. முதல் குழந்தை சுரக்ஷா பிறந்தா. அப்ப சீரியல் வாய்ப்பு வந்தது. வீட்ல அனுமதி வாங்கிட்டு தூர்தர்ஷனில் 'முப்பது கோடி முகங்கள்’ சீரியலில் நடிச்சேன். தொடர்ந்து பல சீரியல்கள் தாண்டி இப்போ, 'அழகி’ எனக்கு முப்பதாவது சீரியல்.''

''சீரியலில் அழுதுட்டே இருந்தாதான் ஹிட் ஆக முடியுமா?''

''சீரியல்ல அழுகுற எல்லாரையுமா மக்கள் ஞாபகம் வெச்சிருக்காங்க. என்னை டி.வி-யில் பார்க்கிறப்போ, அவங்கள்ல ஒருத்தியா பெண்கள் பார்க்கிறதுதான் இந்த வரவேற்புக்குக் காரணம். கேரக்டருக்காக முழுசா மாறுவாங்க எங்க அக்கா. ஷூட்டிங் ஸ்பாட்ல யார்கிட்டயும் ஜாலி கேலி அரட்டைலாம் கிடையவே கிடையாது. 'அப்படி இருந்தா அது கேரக்டர் மூடை மாத்திரும்’னு சொல்வாங்க. 'முகத்தின் உணர்ச்சிகள் 20 சதவிகிதம்... பாடி லாங்குவேஜ்தான் 80 சதவிகிதம் இருக்கணும். அப்போதான் அந்த கேரக்டரில் உண்மை இருக்கும்’னு சொல்வாங்க. அதைத்தான் நான் ஃபாலோ பண்றேன்.''

''திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சுட்டீங்கபோல?''

''ஏற்கெனவே 'கிழக்குச் சீமையிலே’, 'இந்திரா’, 'ஆய்த எழுத்து’னு அப்பப்ப சில படங்களில் நடிச்சுட்டுதான் இருக்கேன். இப்போ 'ஆரோகணம்’ படத்துல ரொம்பப் பிடிச்சு நடிச்சிருக்கேன். படத்தையே

80-20 அழகி சீக்ரெட்!

தாங்கி நிக்கிற கேரக்டர். 'ஆரோகணம்’ ப்ரிவியூ பார்த்துட்டு பாலசந்தர் சார், 'நான் ஒவ்வொரு ஃபிரேமிலும் சரிதாவைத்தான் பார்த்தேன். பிரமிப்பா இருந்தது’னு சொன்னாரு. எனக்கு அந்த வார்த்தைகளை விட வேற விருதே வேண்டாம்.''

''குடும்பம்..?’

''கணவர் சந்திரசேகர் ஏர் இந்தியா ஃபைலட். பெரிய பொண்ணு சுரக்ஷா துபாய்ல எம்.பி.பி.எஸ். படிக்கிறா. சின்னவ லவ்லின் ப்ளஸ் ஒன். ரெண்டு பொண்ணுங்களையும் 18 வயசு வரைக்கும் செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் கூடாதுனு சொல்லி வளர்க்கிறேன். சீரியல்ல எவ்வளவு சிச்சுவேஷன் கடந்து வர்றோம். அதுல எவ்வளவு பாடம் படிச்சிருப்போம்!''

- கலகலவெனச் சிரிக்கிறார் அழகாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism