##~## |
''சமீபத்தில் குபீர் என்று சிரித்தது...?''
''ஃபேஸ்புக்கில் டிமிட்ரி இவ்நோஸ்கியின் ஸ்டேட்டஸ் படித்தபோது! அது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'டெசோ மாநாட்டில் தமிழீழத்தை ஆதரித்துத் தீர்மானம் கிடையாது!’- கருணாநிதி. அப்போ நமீதா டான்ஸாவது உண்டா?’ ''
- த.ராஜன், காஞ்சிபுரம்.
''சொற்கள் மொழியின் பலவீனம் என்கிறார்களே?''
''சமயங்களில்... இருக்கலாம்! நண்பருடன் கடைத் தெருவுக்குச் சென்றிருந்தபோது வாய் பேச இயலாத ஒருவர் புல்லாங்குழலில் சினிமா பாடல்களைப் பாடி யாசித்துக்கொண்டு இருந்தார். அந்தப் புல்லாங்குழல் ஒருபக்கம் உடைந்திருந்தது. பழசாகவும் இருந்தது. ரொம்பவும் சிரமப்பட்டே வாசித்துக்கொண்டு இருந்தார். நண்பர் அருகில் இருந்த கடையில் புதிய புல்லாங்குழல் ஒன்று வாங்கி அவரிடம் தந்தார். அதைத் தலையாட்டி வாங்கிக்கொண்டவர், சிறிது நேரம் கழித்து வாசித்த பாடல்... 'நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க’! அங்கு ஊமையானது சொற்கள்தானே?!''
- பகலவன், நாகப்பட்டினம்.

'' 'அதிசயம், ஆனால் உண்மை!’ மாதிரியான செய்தி ஏதாவது?''
''ஒரு சிம்பிள் மேட்டர் சொல்கிறேன். ஆனால், யோசித்துப் பார்த்தால் 'அட, ஆமாம்ல’ என்று தோன்றும். ரஜினிகாந்தை எல்லோரும் எப்போதும் 'சூப்பர் ஸ்டார்’ என்று பட்டத்தோடு குறிப்பிடுவது இல்லை. அஜித்தையும் யாரும் எப்போதும் 'அல்டிமேட் ஸ்டார்’ என்று குறிப்பிடுவது இல்லை. அவர்கள் ரசிகர்கள் வேண்டுமானால் எப்போதும் அப்படிக் குறிப்பிடலாம். ஆனால், எப்போதும் பட்டத்துடனேயே அழைக்கப்படும் ஒரே நடிகர்... பவர் ஸ்டார்!''
கி.ரவி, தஞ்சாவூர்.
''வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற நிலையில் இருந்து எந்த அளவு நாம் முன்னேறி இருக்கிறோம் ?''
''மனைவியின் பிறப்பு உறுப்புக்கு பூட்டுப் போடும் உச்சத்துக்கு!
இந்தூரைச் சேர்ந்த சோகன்லால் ஒரு மெக்கானிக். இவனுக்குத் தன் மனைவி மீது சந்தேகம். இதனால் மனைவியின் பிறப்பு உறுப்பு அருகே ஒரு துளையிட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எல்லாம், தன் மனைவியின் பிறப்பு உறுப்பில் பூட்டு போட்டுச் சென்றிருக்கிறான் அந்தக் கயவன். நான்கு வருடங்களாக இதனால் அவதிப் பட்டுத் தவித்த அந்த அபலைப் பெண், கடந்த வாரத்தில் தற்கொலைக்கு முயன்று எலி விஷத்தைச் சாப்பிட்டு இருக்கிறாள். மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட போது, டியூப் மூலம் விஷத்தை எடுப்பதற்காக அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிறப்புறுப்பில் பூட்டைப் பார்த்து அதிர்ந்து இருக்கிறார்கள். உடனே, காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவள் கணவனைத் தேடிப் பிடித்து அவனிடம் இருந்து சாவியைவாங்கி பூட்டைத் திறந்து, சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்கள். அன்றைய நாட்களைவிட இன்றுதான் பாரதி, பெரியார்களின் தேவை அதிகம்.''
- மா.அன்பழகன், தாம்பரம்.
''சாமியாருக்கும் அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்?''
''வழக்கு, நீதிமன்றம், பாலியல் புகார், மோசடி என ஏறத்தாழ அனைத்திலும் இருவரிடமும் ஒற்றுமை நிலவுகிறது. என்ன... மக்களைப் பார்த்தால் அரசியல்வாதி கும்பிடுகிறார். சாமியாரைப் பார்த்தால் மக்கள் கும்பிடு கிறார்கள்... அதுதான் வித்தியாசம்!''
- தென்றல் சண்முகசுந்தரம், நத்தக்காடையூர்.

''தமிழ் சினிமாவில் இனி யாரேனும் பிரபலத்தினுடைய வாரிசாக இருந்தால் மட்டும்தானே நடிக்க முடியும்?''
''வாரிசாக இருப்பதன் பிரஷர் தெரிந்தால் நீங்கள் இப்படிப் பேச மாட்டீர்கள். ஒரு சின்ன உதாரணம், 'ஏழாம் அறிவு’ படத்தில் தான் ஸ்ருதி கமல் ஒரு நடிகையாக அறிமுகமானார். அப்போது ஸ்ருதி மிக அழகாக இருந்தார். நளினமும் ஸ்டைலும் கலந்து வசீகரித்தார். நன்றாக நடிக்கவும் செய்தார். அழகிய குரலில் பாடுகிறார். இசையமைக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். சினிமாவில் எத்தனை ஹீரோயின்களுக்கு இத்தனை தகுதிகள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லுங்கள். ஆனால், இத்தனை இருந்தும் ஸ்ருதியை அத்தனை ஈஸியாக ஏற்றுக்கொண்டீர்களா என்ன? 'கமல் பொண்ணு’ என்ற எதிர்பார்ப்பு பிரஷரைக் கடக்க அவர் எத்தனை மெனக்கெட வேண்டியிருந்தது தெரியுமா? அந்தச் சங்கடம் அறிமுகங்களுக்குக் கிடையாது!''
- கே.அனுஷ்கா, திண்டிவனம்.
''புத்தகங்களை விற்க விளம்பரம் அவசியமா?''
''எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. 'நல்ல புத்தகங்களுக்குச் சிறகுகள் உண்டு. அவை பறந்து போய்விடும்!''
- விஷ்ணுப்ரியா, திருச்சி-20
நடக்கிற கூத்தைப் பார்த்தால் ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்குத் தேவையா என்று தோன்றுகிறதே..?
உங்களுக்கு அப்படியா? எனக்கு, நாட்டுக்கு ஜனாதிபதியே தேவையா என்று தோன்றுகிறது!
- ப.முருகன், வந்தவாசி.
