Published:Updated:

மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!

Vikatan Correspondent
மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!
மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!
மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: தெலங்கானா உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதி்ர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை தொடங்கியதும் தெலங்கானா, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நண்பகல் 12 வரை அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 1 மணி வரை அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவை மீண்டும் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

##~~##
இதையடுத்து, அவை நடவடிக்கையை வரும் திங்கட்கிழமை வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.