Published:Updated:

விதியை மீறி டிஜிட்டல் பேனர்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Vikatan Correspondent
விதியை மீறி டிஜிட்டல் பேனர்:  தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
விதியை மீறி டிஜிட்டல் பேனர்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
விதியை மீறி டிஜிட்டல் பேனர்:  தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

சென்னை: விதியை மீறி சென்னையில் டிஜிட்டல் பேனர்களை வைத்த ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி விடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இன்று பிற்பகலுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் பல இடங்களில் விதியை மீறி பல இடங்களில் ஆளும் கட்சியினர் டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளதாக கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

##~~##
இன்று இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதியை மீறி சென்னையில் டிஜிட்டல் பேனர்களை வைத்த ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.

அத்துடன் விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று பிற்பகலுக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.