Published:Updated:

ஜன் லோக்பாலை நிறைவேற்ற கோரி சசிபெருமாள் 2வது நாளாக உண்ணாவிரதம்!

Vikatan Correspondent
ஜன் லோக்பாலை நிறைவேற்ற கோரி சசிபெருமாள் 2வது நாளாக உண்ணாவிரதம்!
ஜன் லோக்பாலை நிறைவேற்ற கோரி சசிபெருமாள் 2வது நாளாக உண்ணாவிரதம்!

சென்னை: வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி சென்னையில் காந்தியவாதி சசிபெருமாள் 2வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஜன் லோக்பாலை நிறைவேற்ற கோரி சசிபெருமாள் 2வது நாளாக உண்ணாவிரதம்!

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி போராடும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில்  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி மன்ற வளாகத்தில் 2வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் சசி பெருமாளோடு, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவராவ், சாய் சீனிவாசன், பரமகுரு மற்றும் மதுக்குடிப்போர் விழிப்புணர்வு புரட்சி இயக்கத்தின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ஜன் லோக்பாலை நிறைவேற்ற கோரி சசிபெருமாள் 2வது நாளாக உண்ணாவிரதம்!

இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் குறித்து சசிபெருமாள் நம்மிடம், ''வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே, அன்னா ஹசாரே இந்த மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஆனால், மத்திய அரசு அதனை நிறைவேற்றுவதாக கூறி காலம் கடத்தி வருகின்றது.

மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் 10.12.2013 முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவின் கோரிக்கையினை நிறைவேற்றிட ஆதரவு தெரிவித்து இந்த காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றோம். மது, போதை, ஊழலற்ற உலகம் படைக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இந்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் முதலில் மறுத்தார்கள். நேற்றைய தினம் என்னை காவல் நிலையம் அழைத்துச் சென்று குடியிருப்பு வாளாகம் இருக்கும் இந்தப் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி தர முடியாது என கூறினார்கள். சட்டத்துக்கு முரணாக உண்ணாவிரதம் இருப்பதாக நீங்கள் கருதினால் என்னைக் கைது செய்யலாம் என்று கூறியதும் விட்டுவிட்டார்கள்" என்றார்.

##~~##
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவராவ் கூறுகையில், ''அரசியல்வாதிகளால் திட்டம் போட்டு திருடிய ஊழல் பணம் கோடி கோடியாக சுவிஸ் வங்கியில் கொட்டிக் கிடக்கிறது. அந்தப் பணத்தை நம்நாட்டுக்கு வரவழைத்து மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தால், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அறிவித்த கணக்குப்படி குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் கிடைக்கும். ஊழலுக்கு எதிரான வலுவான லோக் ஆயுக்தா தமிழ்நாட்டிலும், வலுவான லோக்பால் இந்தியாவிலும் நிறைவேற்றப் போராடுவோம். இதற்கு உறுதியளிக்காத யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று சபதமெடுப்போம்" என்றார்.

செ.கிரிசாந்

படங்கள்:
கேசவசுதன்