Published:Updated:

உ.பி.யில் புதிய இடத்தில் தங்கப்புதையல்: தோண்ட அனுமதி கோரி சாமியார் வழக்கு!

Vikatan Correspondent
உ.பி.யில் புதிய இடத்தில் தங்கப்புதையல்: தோண்ட அனுமதி கோரி சாமியார்  வழக்கு!
உ.பி.யில் புதிய இடத்தில் தங்கப்புதையல்: தோண்ட அனுமதி கோரி சாமியார் வழக்கு!
உ.பி.யில் புதிய இடத்தில் தங்கப்புதையல்: தோண்ட அனுமதி கோரி சாமியார்  வழக்கு!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் தங்கப்புதையல் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் ஷோபன் சர்க்கார், தற்போது வேறொரு இடத்தில் 2,500 டன் தங்கம் இருப்பதாக கூறி, அதனை தோண்ட அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

.உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைந்து இருப்பது, தனக்கு கனவு மூலம் தெரியவந்தததாக ஷோபன் சர்க்கார் என்ற பிரபல துறவி கூறினார். அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தங்கப்புதையலை எடுப்பதற்காக அந்த பகுதியில் தோண்டும் பணி தொடங்கியது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் இந்த பணி நடைபெற்று வந்தது.

மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல் சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. இதனையடுத்து அப்பணி கைவிடப்பட்டது. முன்னதாக யாரோ ஒரு சாமியார் கனவு கண்டு சொன்னார் என்பதற்காக, அரசே தங்கப்புதையல் இருப்பதாக நம்பி தோண்டும் பணியில் ஈடுபடலாமா என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சாமியார் ஷோபன் சர்க்கார் இன்னும் அடங்கியபாடில்லை. அதே உத்தரபிரதேசத்தின் ஃபதேப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு இடத்தில் 2,500 டன் தங்கம் இருப்பதாகவும் அந்த இடத்தில் தனது சொந்த செலவிலேயே சர்வே செய்து தோண்ட தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

##~~##
சர்வே செய்வதற்காக கான்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தை அமர்த்தி இருப்பதாகவும், இதற்காக அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் 78,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பதாகவும், இது தவிர போக்குவரத்து மற்றும் பணியாளர்கள் குழு, உபகரணங்களுக்காக தனியாக 85,000 ரூபாய் கொடுத்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் சர்வே பணிக்கு உதவ கான்பூர் ஐஐடி
இது தொடர்பாக தாம் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பிரதமர் மன்மோகன் சிங், மாவட்ட மாஜிஸ்திரேட் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் எழுதியும், அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வராததால், புதையல் இருக்கும் இடத்தில் தோண்ட அனுமதி அளிக்க வேண்டும் என சாமியார் ஷோபா சர்க்காரின் வழக்கறிஞர், இம்மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாதிட்டார்.
அதனைக்கேட்ட நீதிபதி வி.கே. சுக்லா, இந்த வழக்கை மற்றொரு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டு, ஒத்திவைத்தார்.