Published:Updated:

அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்!

Vikatan Correspondent
அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்!
அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்!
அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்!

பண்ருட்டி: அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தே.மு.தி.க.வில் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென்று அந்த கட்சியில் இருந்து விலகியதுடன் தனது எம்.எல்.ஏ. பதவியையும், கட்சிப்பதவியையும் ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனின் உறவினர் இல்ல திருமணம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின், மேல்காங்கிருப்பு கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வமான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

வழிபாடு முடிந்தபின் நிருபர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ''தமிழக மக்களுக்காக நான் நீண்ட காலமாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து சேவை செய்து வந்தேன். தற்போதைய சூழ்நிலை காரணமாக அரசியலிருந்து ஓய்வு பெறுவது என்பது எனது செயல்பாட்டை குறைத்து கொள்வதாகும். ஆனால் அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன். தமிழ்நாட்டின் நன்மைக்கு பயன்படும் வகையில் என் அறிவுக்கு எட்டிய கருத்துக்களை மக்களின் முன் வைப்பேன்.

##~~##
ஓரு அரசியல் இயக்கத்திலிருந்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்க்கிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய மாபெரும் தலைவர்கள் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்நாளை அற்பணித்து பணியாற்றினார்களோ, அதுபோல அவர்களது லட்சிய கனவு நிறைவேறும் வகையில் என் சக்திக்கேற்ற அளவில் பணிகளை தொடருவேன். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வு பெற உறுதுணையாக இருப்பேன்" என்றார்.