Published:Updated:

தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான்: பழ.நெடுமாறன் காட்டம்

தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான்: பழ.நெடுமாறன் காட்டம்
தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான்: பழ.நெடுமாறன் காட்டம்

திருச்சி: தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான் என்றும், இதனால்தான் மத்திய அரசு தமிழர்களை மதிப்பதில்லை என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான்: பழ.நெடுமாறன் காட்டம்

திருச்சியில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாலை, புத்தூர் நால்ரோடு அருகே உள்ள வெட்காளியம்மன் திருமண மண்டபத்தில்  இந்திய ராணுவம் இலங்கையில் செய்த அட்டூழியங்களை கண்டித்து  சென்னை கிண்டி கத்திப்பாரா வளைவில் நேரு சிலை மீதும், கொடைக்கானல் அரசு வானொலி நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசி 8 வருடங்கள் சிறைச்சென்று திரும்பியுள்ள பொழிலனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 
வழக்கறிஞர் பானுமதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலர் நிலவழகன், தமிழர் நீதிக்கட்சித் தலைவர் சுப.இளவரசன், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலர் நிலவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் குடந்தை அரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் த.இந்திரஜித், உலக தமிழர் பேரமைப்பின் தலைவர்  பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு பொழிலனை வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய நெடுமாறன், விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை மீது 1987-90ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தி, 42 பேர் உயிரிழக்க காரணமாக இருந்தது இந்திய அமைதிப்படை. அப்போது இதை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகளும், ஆட்சியில் இருந்தவர்களும் ஆக்கப்பூர்வமான போராட்டத்தை நடத்தவில்லை.
 

தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான்: பழ.நெடுமாறன் காட்டம்

அப்போது நடந்த தவறை சுட்டிக்காட்டிய பொழிலனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை. ஆனால், மதுரையில் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இந்த முரண்பாடு எதற்காக..?  தேசிய இனத்துக்காக போராடுபவர்களை ஒடுக்கவும், முடக்கவும்தான் தடா, பொடா, தேசியப் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையைப் போக்க இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்ற வேண்டும். போராட முன்வர வேண்டும்.

##~~##
ஏனெனில் மேடையில் வீரமாக பேசினால் நமக்கு எதுவும் கிடைக்காது. நமக்குத் தேவை அர்ப்பணிப்பு உணர்வுதான். தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான். இதனால்தான் மத்திய அரசு தமிழர்களை மதிப்பதில்லை.  இலங்கையைத் தொடர்ந்து மலேசியா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகத் தமிழர்களைக் காக்க தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய அனைத்து கட்சி தலைவர்களும், "வேறுபாடுகளை கலைந்து  தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும். அப்படி ஒன்றிணைந்தால்தான் தமிழர் நலனையும், தமிழ் ஈழத்தையும் வென்றேடுக்க முடியும். இனி தனி நபர்களாய் சிறைச் செல்வதைவிட ஆயிரக்கணக்கான  நபர்களை போராட்ட களத்தில் இறக்கி கும்பலாக செல்லவேண்டும்" என் முழங்கினர்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீக்‌ஷித்