Published:Updated:

நானே கேள்வி.. நானே பதில்!

உன்னை அறிந்தால்...

நானே கேள்வி.. நானே பதில்!

உன்னை அறிந்தால்...

Published:Updated:
##~##

'' 'இந்தியாவா இது?’ என்று உங்களைச் சமீபத்தில் ஆச்சர்யப்பட வைத்தது எது?''

 ''ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம் வென்றபோது, இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக 4 - 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஒரு 20 - 20 போட்டியையும் அட்டகாசமாக ஜெயித்தது. ஆனால், இந்தச் செய்தி எதுவுமே மெயின் ஸ்ட்ரீம் செய்திகளில் இடம் பிடிக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்கா இந்த நிலைமை?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.

'' 'திராவிட’ என்ற அடைமொழி உள்ள கட்சியுடனும் தேசியக் கட்சியுடனும் கூட்டணிவைக்க மாட்டோம்’ என்கிறாரே ராமதாஸ்?''

''அப்படியானால், அண்ணா ஹஜாரே முன்னேற்றக் கழகத்துடன்தான் அவர் கூட்டு சேர முடியும்.''

- பாலா சரவணன், சென்னை.

நானே கேள்வி.. நானே பதில்!

'' 'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்’ என்று எம்.ஜி.ஆர். சினிமாவில் பாடியதை யாராவது அறிந்துள்ளாரா?''

''நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றாக அறிந்துள்ளார்.

நிரந்தர முதல்வர், நிரந்தரத் தலைவர், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று நிரந்தரம் பற்றி ஒப்பிக்கப்படும் இந்தக் காலத்தில், ரஜினி சமீபத்தில் கலந்துகொண்ட 'கும்கி’ பட விழாவில் இப்படிச் சொல்கிறார்...

'நோய் எதிர்ப்புச் சக்தி இன்னும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதுவரை பொது நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். மூளையை மட்டும் பயன்படுத்துவதற்கு நான் டைரக்டரோ எழுத்தாளரோ இல்லை. நான் நடிகர். எனக்கு உடம்பு வேலை செய்ய வேண்டும்!''

- அல்லிராஜ், கோவை.

'' 'ஒரு ரூபாய் அரிசி விலை உயர்ந்தால் மக்கள் கூச்சல்  போடுகிறார்களே’ என்ற ப.சிதம்பரத்துக்கு நாட்டின் நிதி அமைச்சர் பதவி பரிசளிக்கப்பட்டுள்ளது சரியா?''

''உங்களை ஆள்கிற முதலமைச்சராகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ வராமல்போனாரே!

ஒரு சிறிய கதை. ஒருவர் ஆசையோடு வளர்த்த மான் காணாமல்போனதால் ரொம்பக் கலங்கிப்போனார். அவர் கலக்கத்தைக் கண்டு மனம் இரங்கி இறைவன் அவர் முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.

அவர், 'என் மான் காணாமல்போக யார் காரணமோ, அவர் என் முன் வர வேண்டும். என் கையால் அவருக்கு நானே தண்டனை தர வேண்டும் என்றதும் இறைவன் அதிர்ந்துபோனார். பின்பு தயங்கி, 'அது வேண்டாம் பக்தனே...’ என்று இழுத்தார். பக்தன் கோபமுற்று, 'இறைவா... ஒரு பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றாமல் போவதற்குப் பெயர் வரமா?'' என்று கேட்டார்.

'பக்தா... நன்றாக யோசித்துத்தான் கேட்கிறாயா..?’ என்ற இறைவனைப் பார்த்து, 'ஆமாம்... நன்றாக யோசித்த பின்பே கேட்கிறேன். முடியுமா... முடியாதா?’ என பிடிவாதமாகக் கேட்க, இறைவன் சலித்துப்போய், 'சரி... வேறு வழி இல்லை. உன் மானைக் கொண்டுபோன உயிரினம் உன் முன் நிற்கக் கடவது’ என்று கூறி மறைந்தார்.

பக்தன் முன்னே தோன்றியது... ஒரு சிங்கம்.

பக்தன் அலறினான். அலறி என்ன செய்ய?''

- உ.அனந்த கோபால், கரூர்.

''மாமியாரை மிஞ்சிய மருமகள் யார்?''

''வேறு யார்... நம்ம சோனியா காந்திதான். இந்திரா காந்தி ஜனாதிபதியைத்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக்கினார்.

சோனியா காந்தியோ பிரதம மந்திரியையே 'ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக்கிவிட்டாரே.''

ஜோசப்.சி.பிரேமகுமார்

''நித்தியின் அடுத்த அதிரடிப் பேட்டி என்னவாக இருக்கும்?'

''மதுரை ஆதீனமா... யார் அவர்? அவரை நான் இது வரை பார்த்ததுகூடக் கிடையாது!''

-  எஸ்.ராமன்

நானே கேள்வி.. நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism