Published:Updated:

ஷேர் அண்ட் லைக்!

விகடன் டீம்

ஷேர் அண்ட் லைக்!

விகடன் டீம்

Published:Updated:

'மனம்’ திறந்த ஸ்ரேயா!  

ஷேர் அண்ட் லைக்!

காத்திருந்தார்... விழாக்களில் பங்குஎடுத்தார்... இயக்குநர்களுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினார். ம்ஹூம்... மேக்ஸிம் பத்திரி கைக்கு அதிரடி போட்டோ ஷூட்டினார்... பற்றிக்கொண்டது பரபரப்பு. இந்த வார சிறந்த 'மனம் திறந்தவர்’ ஸ்ரேயா! :)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வார சென்சேஷன்!

ஷேர் அண்ட் லைக்!

  '18 அகெய்ன்’ விளம்பரம் உண்டாக்கிய பரபரப்பு!

''சொந்தக் கதை மாதிரியே சொன்னாரே!''

ஷேர் அண்ட் லைக்!

வாரிசு நடிகர்களில் ஹிட் ஸ்டார் அவர். சில மாதங்களுக்கு முன் அவருக்கு சுடச்சுட மசாலா கதை ஒன்றைச் சொல்லி இருக்கிறார் ஒரு கமர்ஷியல் இயக்குநர். 'அட, கதை நல்லா இருக்கே!’ என்று கால்ஷீட் கொடுத்து நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ஒன்றிரண்டு ஷெட்யூல் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. படத்தில் நடிக்கும் மும்பை வில்லனுக்கு நடிகரே ஆங்கிலத்தில் கதையைச் சொல்லி இருக்கிறார். கதையின் லைனைக் கேட்டதுமே, ''அட, இது அந்தப் படமாச்சே!'' என்று ஹாலிவுட்டின் கார் சேஸ் படப் பெயர் ஒன்றைச் சொல்லியிருக்கிறார் வில்லன். ''ஆஹா... சொந்தக் கதை மாதிரியே சொன்னாரே!'' என்று நொந்து அந்தப் பட டி.வி.டி. வாங்கிப் பார்த்த நடிகர், ''ஏமாத்துனது ஏமாத்திட்டீங்க... இது காப்பினு நியூஸ் வர்றதுக்கு முன்னாடி படத்தை ரிலீஸ் பண்ணப் பாருங்க!'' என்று இயக்குநரை விரட்ட... அல்லும் பகலுமாக டாப் கியரில் நடக்கிறது ஷூட்டிங்!

ஒலிம்பிக்கின் டாப் அழகி!

ஷேர் அண்ட் லைக்!

லிம்பிக் மேடையில் டாப் பிளேயராகக் கவனம் கவர பல ஆண்டுகளாக மைக்கேல் பெல்ப்ஸ் எவ்வளவு மெனக்கெட்டு இருப்பார்? ஆனால், பதக்கம் தட்டாமல் கட்டழகை மட்டுமே காட்டி 'டாப் கிளாமர் பிளேயர்’ பட்டம் தட்டியிருக்கிறார் பராகுவே அழகி லெரின். உலக ரசிகர்கள் ஜொள்ளி அளித்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வான அவருடைய குட்டி டேட்டா இது...

ஈட்டி எறிதலோடு, மாடலிங்கும் லெரினின் பணி. 2008 பீஜிங்கிலும் கலந்துகொண்டவர். இரண்டு ஒலிம்பிக்கில் எந்த மெடலும் அடிக்கவில்லை என்றாலும், அதற்காக அவரும் கவலைப்படவில்லை. ரசிகர்களும் கவலைப் படவில்லை. 'மெடல் முக்கியமா என்ன... அதான் நம்பர் ஒன் மாடல் ஆகியாச்சே!’ என்று டாட்டா காட்டிக் கிளம்பிவிட்டார் லெரின்.

ஜிம் கும் அஜித்!

ஷேர் அண்ட் லைக்!

ஜித் நின்றாலும், நடந்தாலும் நியூஸ். இந்த வாரம் அவர் ஜிம்மில் புஜம் புடைக்கக் காட்சியளிப்பது நெட் ஹிட்!

ஜனாதிபதியின் முதல் உத்தரவு!

ஷேர் அண்ட் லைக்!

னாதிபதியாகப் பதவி ஏற்றதும் பிரணாப் முகர்ஜியின் முதல் உத்தரவு கேபிள் டி.வி. தொடர்பானதுதான். என்ன உத்தரவு என்று யோசிக் கிறீர்களா? பிரணாபின் மனைவி பெங்காலி சீரியல்களின் தீவிர ரசிகையாம். அதனால், ராஷ்டிரபதி பவன் டி.வி-க்களில் பெங்காலி சேனல்கள் தெரியுமாறு டியூன் செய்யுங்கள் என்பதுதான்  முதல் உத்தரவு!

சீனியர் Vs ஜூனியர்!

ஷேர் அண்ட் லைக்!

தீனப் பதவியில் ஒருவரை நியமிப்பது சுலபம், நீக்குவது கடினம். வாரிசு கோர்ட் படி ஏறினால் அவருக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதாலேயே, ஓணான்-வேட்டி கதையை நினைத்துப் புலம்புகிறாராம் பெரியவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism