Published:Updated:

கனவு மெய்ப்பட வேண்டும்!

காரைக்காலில் அசத்தல் தமிழ்ப் பள்ளி

கனவு மெய்ப்பட வேண்டும்!

காரைக்காலில் அசத்தல் தமிழ்ப் பள்ளி

Published:Updated:
##~##

காரைக்காலின் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்குப் பதவி உயர்வு கொடுத்துவிட்டார்கள். இப்போது அது உயர்நிலைப் பள்ளி. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? மற்ற பள்ளிகளைப் போல் அல்லாமல் இங்கு பயிற்று மொழி, தமிழ் மட்டுமே. மாணவர்களுக்குக் கட்டணமே கிடையாது.

 கும்பகோணத்தில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய மருதமுத்து, குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். வயது மூப்பின் காரணமாக அவர் ஓய்வு எடுக்க... வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனும் அவரது மனைவி உமா மகேஸ்வரியும் பள்ளியை நிர்வகிக்கிறார்கள். பள்ளிக்காக உமா மகேஸ்வரி தன் மாதச் சம்பளத்தை அப்படியே கொடுத்துவிடுகிறார். நல்ல உள்ளம்கொண்ட சிலரும் உதவுகிறார் கள். சேவை நோக்கோடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு மெய்ப்பட வேண்டும்!

தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் சொற்பச் சம்பளமே பெறுகிறார்கள்.

பள்ளியில் மாணவர்கள் ''வணக்கம் ஐயா, வணக்கம் மாமா'' என்று விருந்தினர்களை வரவேற்கிறார்கள். ஆசிரியர்கள் அனைவரும் அண்ணன்கள், ஆசிரியைகள் அக்காக்கள். வாரத்தின் ஐந்து நாட்கள் தமிழ். சனிக் கிழமை முழுவதும் ஆங்கிலம் கற்கிறார்கள். யோகா, சிலம்பம், கரகம், பரதம், இயற்கை விவசாயம் போன்ற கலைக் கல்வியும் உண்டு.

''இங்கு படிப்பவர்கள் அடித்தட்டு மக்களின் குழந்தைகளே. பெற்றோர்களே சேர்ந்து இங்கு உணவகம் நடத்துகிறார்கள். மாதம் 100 ரூபாய் கட்டணத்தில் குழந்தைகளுக்குத் தரமான மதிய உணவு அளிக்கிறோம். இங்கு படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை யின் உயரத்தை எட்ட வேண்டும் என்பது எங்கள் கனவு...'' என்கிறார் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன்.

பள்ளித் தோட்டத்தில் குழந்தைகளே கீரை, மஞ்சள், கருணை, வெண்டை, கொத்தவரை, வாழை, அகத்தி, பப்பாளி, கறிவேப்பிலை, புடலை என விதவிதமாகப் பயிர் செய்கிறார்கள். அது அவர்களின் மதிய உணவுக்கு. எல்.கே.ஜி-க்கு இங்கே பூக்கள் என்று பெயர். யு.கே.ஜி-க்கு - பிஞ்சுகள்! 'ரெயின் ரெயின் கோ அவே’ என்று மழையைத் துரத்திய காலம் போய் குழந்தைகள் இங்கு, 'மழையே மழையே... வா வா!’ என்று அழைப்பது... ஆத்தி... அம்புட்டு அழகு!

கனவு மெய்ப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism