##~## |
இணையத்தில் 'எம்.ஜி.ஆர். பேரன்’ என்ற அடைமொழியோடு ஏகப்பட்ட தளங்கள். யார் இவற்றை இயக்குகிறார்கள் என்று பின்னணி விசாரித் தால், ''நான்தான் எம்.ஜி.ஆர் பேரன்!'' என்று அறிமுகமாகிறார் எம்.ஜி.சி.பி.பிரதீப். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிக்குப் பத்து பிள்ளைகள். அதில் ஒன்பதாவது பிள்ளை பாலுவின் மகன் இந்த பிரதீப். ''எம்.ஜி.ஆரைப் பத்திப் பல தவறான தகவல்கள் இணையத்தில் உலவுது. அதுல சில விஷயங்கள் எங்கள் குடும்பத்துக்கு வருத்தத்தைக் கொடுத்துச்சு. அதான் எம்.ஜி.ஆரைப் பத்தின உண்மையான செய்திகள், அரிய படங்களை எங்கள் தளங்களில் அப்லோட் செய்கிறேன்'' என்கிறார் பொறுப்பாக.
''எம்.ஜி.ஆர். பேரன் சரி... அவரை நேர்ல பார்த்திருங்கீங்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க... எம்.ஜி.ஆர். இறக்கும்போது எனக்கு 10 வயசு. நான் சின்னப் பையனா

ஓடி விளையாடுறதை எல்லாம் அவர் பக்கத்துல இருந்து பார்த்திருக்கார். கிட்னி ஆபரேஷன் முடிஞ்சு அவர் அமெரிக்கா வில் இருந்து திரும்பி ராமாவரத்துக்கு வந்தப்போ, எல்லாரும் அவரைப் பார்க்கக் கிளம்பினாங்க. அன்னைக்கு ஞாயித்துக் கிழமை. டிவி-யில் 'ஹீ மேன்’ நாடகம் போடுவாங்க. நான் அதைப் பார்க்கணும்னு 'வர மாட்டேன்’னு அடம் பண்ணேன். அடிச்சு இழுத்துட்டுப் போயிட் டாங்க. அங்கே போய்ப் பார்த்தா, எம்.ஜி.ஆர். பெட்ல உட்கார்ந்துக்கிட்டு 'ஹீ மேன்’ பார்த்துக்கிட்டு இருந்தார். அப்போ பேரன்கள் எல்லாருக்கும் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.''
'' 'எம்.ஜிஆர். வாரிசு’னு யார் யாரோ உலவுறாங்க. நீங்க, ஏன் அரசிய லுக்கு வரலை?''
''இப்போ நான் அ.தி.மு.க-வில்தான் இருக்கேன். 2009-ல் கொடநாட்டில் அம்மாவைப் பார்த்துக் கட்சியில் சேர்ந்தேன். என் கல்யாணத்துக்குப் பரிசெல்லாம் அனுப்பிச்சு வாழ்த்தினாங்க அம்மா. எனக்குப் பதவி மேல ஆசைலாம் இல்லை. இப்போ எம்.ஜி.ஆர். வயசை மூணாப் பிரிச்சு, அவரோட வாழ்கை வரலாற்றை மூன்று தொகுதிகளா எழுதிட்டு இருக்கேன். 'கிங் ஆஃப் மார்ஷல்’னு புத்தகத்துக்குப் பேர்!''
''கறுப்பு எம்.ஜி.ஆர். பத்தி என்ன நினைக்கிறீங்க?''
''எதுக்கு சார் இந்தக் கேள்வி? எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. ஆனா, அவர் கொள்கை களைக் காப்பாற்றுகிறவர்களும் பின்பற்றுகிறவர் களும் எம்.ஜி.ஆர். மாதிரிதான்!''