Published:Updated:

மற்றொரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு ஏற்பு!

Vikatan Correspondent
மற்றொரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு ஏற்பு!
மற்றொரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு ஏற்பு!
மற்றொரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு ஏற்பு!

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வதேந்தர் குமார் மீதான பாலியல் புகார் குறித்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் ஸ்வதேந்தர் குமாரிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி போது தாம் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக இளம்பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் கூறினார்.

இது தொடர்பாக ஸ்வதேந்தர் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஸ்வதேந்தர் குமார், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி என்ற அந்த பெண் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதிபதிகள் மீதான புகாரை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதில்லை என்று சுட்டிக்காட்டியிருந்த அவர், தமது புகார் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

##~~##
இந்நிலையில் இந்த மனுவை இன்றூ விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்நீதிமன்றம் வரும் புதனன்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஸ்வதேந்தர் குமார், இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு பணிக்கு வராமல் தவிர்த்தார். 
ஏற்கனவே ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான ஏ.கே.கங்குலி மீதும் இதேப்போன்று பெண் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றிய பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாரால், அவர் மேற்குவங்க மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.